Adaptive Research Centre, Vavuniya – Tamil

ARS - VAVUNIYA

FCRDI Sub Unit

அனுசரணை ஆராய்ச்சி நிலையம்
வவுனியா

இந் நிலையமானது 1980களில் அனுசரணை ஆராய்ச்சி நிலையமாக ஸ்தாபிக்கப்பட்டது. வவுனியா நகரத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் A9 பாதையில் அமைந்துள்ள இவ் நிறுவனம் அண்மைக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மறுசீரமைக்கப்பட்டது. வயற்பயிர் மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் கீழ் வருகின்ற முகாமைத்துவத்தினுள் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் கண்காணிப்பில் இயங்கி வருகின்றது.

பணிக்கூற்று மற்றும் நோக்கக்கூற்று

பணிக்கூற்று
வயற்பயிர்கள் மற்றும் பழப்பயிர்களின் விவசாய ஆராய்ச்சியில் வடபிராந்தியத்தில் உன்னத நிலையை எய்துவதற்கு வழிசமைத்தல்.


நோக்கக்கூற்று
விவசாயிகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடலுடன் கூடிய விவசாய ஆராய்ச்சிகளை அமுல்படுத்தி வடபிராந்தியத்தில் உற்பத்தியை அதிகரித்து தரமான விவசாய பொருட்களை வழங்கி தன்னிறைவை அடைவதுடன் வர்த்தக துறையிலும் பங்களித்தல்.

பிரதான சேவைகள்

இந் நிறுவனத்தின் பிரதான சேவைகளாவன.

  • வயற்பயிர்கள், நெல் மற்றும் மரக்கறிகள் சம்பந்தமான தேசிய ஒருங்கிணைந்த இனங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • இனங்களுக்கான ஒருங்கிணைந்த அனுசரணை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • தேவையேற்படுமிடத்து தொழில்நுட்ப அபிவிருத்திக்கு உதவிசெய்தல்.
  • தாவர கருமூல வளங்களை பேணிப்பாதுகாத்தல்.
நிறுவன தலைவர், அனுசரணை ஆராய்ச்சி நிலையம் - வவுனியா

திரு. எ.பி. ஜயசிங்க

நிறுவன தலைவர்
விவசாய ஆராய்ச்சி உதவியாளர்

எம்மை தொடர்புகொள்ள