ETC-training division – ta

பயிற்சிப் பிரிவு

பயிற்சிப் பிரிவின் முக்கிய பொறுப்பானது, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பயிற்சி மையங்கள் மூலம் விரிவாக்கற் பயிற்சி நிலையத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் செயற்படுத்தலாகும். இலங்கையில் உணவுப் பயிர்கள் உற்பத்தித் துறையில் நேரடியாக பணியாற்றும் விவசாயிகள், தொடர்புடைய சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்களின் அறிவு, அநுபவம், நேர்மறையான அனுகுமுறைகளை வழங்குவதற்காக பயிற்சிப் பிரிவின் கீழுள்ள இரண்டு சேவைக்கால பயிற்சி நிலையங்கள் (ISTI) கன்னோறுவை, அகுனுகொலபெலஸ்சவில் அமைந்துள்ளன. நான்கு மாவட்ட பயிற்சி நிலையங்கள் (DATC) வீரவிலை, பொலன்னறுவை, வாவின்னை, அட்டாலைச்சேனையில் அமைந்துள்ளன. பண்ணை இயந்திரங்கள் பாவனை தொடர்பான அறிவு, பயிற்சியினை வழங்க அநுராதபுரம் புளியங்குலத்தில் பண்ணை இயந்திரங்கள் பயிற்சி நிலையம் (FMTC) இப்பிரிவின் கீழ் செயற்படுயின்றது.

மேலும் இப் பயிற்சி நிலையங்களிலும் பிபிலை, வாரியபொலை, லபுதுவை விவசாயப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படும் தேசியத் தொழிற் தகைமை ( NVQ 3) மற்றும் (NVQ 4) நிலை பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கப்பட்ட கல்வித் திட்டங்களை 13 வருடகாலமாக பயிற்சிப் பிரிவு மேற்பார்வை செய்கின்றது.

குறிக்கோள்

தரமான பயிற்சி வேலைத்திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அது தொடர்புடைய பங்குதாரர்களின் அறிவு, திறமை மற்றும்  அணுகுமுறையினை மேம்படுத்தி நிலையான விவசாய அபிவிருத்தியினை உறுதி செய்தல்.

 

நோக்கம்

  • ஆராய்சிப் பிரிவினல் அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான தொழில்நுட்ப உத்தியோகத்தினர்களின் அறிவையும் திறமையையும் மேம்படுத்தலும் புதுப்பித்தலும்.
  • உழவர் சமூகத்திற்கும், மற்றைய பங்குதாரர்களுக்கும் பொருத்தமான தொழில்நுட்பங்களை பகிர்ந்தளித்தல்.
  •  தொழிற் துறைக்காக NVQ 4 சான்றிதழ் மட்ட தகைமையுடைய இளைஞர், யுவதிகளை உருவாக்கல்
  •  ஒவ்வொரு நிறுவனங்களினதும் தேவைகளுக்கேற்ப்ப நடத்தப்படும் பயிற்சி வேலைத்திட்டங்களில் மாணவர்கள் பங்கு பற்றுவதற்கான ( பாடசாலை, தொழில்நுட்ப நிறுவனம், பல்கலைக் கழகம்) சந்தர்ப்பமளித்தல்

செயற்பாடுகள்

  • பயிற்சி மையங்களின் நிதி மற்றும் அபிவிருத்தி வேலைகளை மேற்பார்வை செய்தல்.
  •  பயிற்சி மையங்களில் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்களை திட்டமிடல், ஒருங்கிணைத்தல்,மேற்பார்வை செய்தல்.
  • இடை மாகாணம், மாகாணங்களில் முற்போகக் கூட்டங்களை (சிறுபோகம், பெரும்போகம்) ஏற்பாடு செய்தல்.
  • அதிகாரிகள், மற்றைய உத்தியோகத்தர்களுக்கான முற்சேவை பயிற்சிகளை ஏற்பாடு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.
  •  பயிற்சி மையங்களில் காலாண்டு பயிற்சிக்கான கால அட்டவணைகளைத் தயாரித்தல்.
  • பயிற்சிப் பொருட்களை (மொடியூல் பாடத்திட்டம் போன்றவை) மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைத்தல் மற்றும் ஏற்பாடு செய்தல்.
  •  விவசாயத்திற்கான NVQ4 பாடநெறியினை ஒருங்கிணைத்தல் மற்றும் வழிநடத்துதல்.

பிரிவுகள்

  • சேவைக்கால பயிற்சி நிலையம் (ISTI)
    •  கன்னோறுவை
    • அகுனுகொலபெலஸ்ச
  • மாவட்ட பயிற்சி நிலையம் (DATC)
    • வீரவில

    • பொலன்னறுவை

    • வாவின்ன

    • அட்டாலைச்சேனை

  •  பண்ணை இயந்திரங்கள் பயிற்சி நிலையம (FMTC)
    • அநுராதபுரம்
  •  பூங்கனியியல் பயிற்சி மற்றும் ஆராய்சி நிலையம் (HTDI)
    • பிபிலை
24-512


திரு. ஆர்.எச்.யு. குணவர்த்தனா

மேலதிக பணிப்பாளர்( பயிற்சி)

தொடர்பு கொள்ள

பயனுள்ள இணைப்புகள்

விவசாய அமைச்சகம்

விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான இலங்கை கவுன்சில் (CARP)

அரசு தகவல் மையம்

மேலும் இணைப்புகள்……