- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
தொழினுட்பங்கள்
பயிராக்கவியல் பிரிவு – நெல்லில் களைகட்டுப்பாட்டிற்காக மாற்றியமைக்கப்பட்ட நீரில் விதைக்கும் முறை
சில நெல் வர்க்கங்கள் நீர் தேங்கிய நிலையில் முளைக்கும் திறனை கொண்டுள்ளன. எனவே முளைக்கும் போதும், நாற்று வளர்ச்சியின் போதும் வெள்ளத்தை தாங்க கூடியது. இந்த திறன் காற்றில்லா முளைப்பு தாங்குதிறன் (AG தாங்குதிறன்)எனப்படும். AG தாங்குதிறன் நேரடியாக விதைக்கப்பட்ட நெல்லிற்கு (DSR) பயன்படுத்தப்பட்டால்இது களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் களைக் கொல்லி பயன்பாட்டை குறைக்கவும் பயன்படுகிறது. மேலும் விதைக்கப்பட்ட விதைகளுக்கு கொறித்துண்ணி பறவைகளால் ஏற்படும் சேதத்தை வயலில் நீர் தேங்கி நிற்குமாறு பேணுவதால் குறைக்கலாம். மேலும் நெல் விதைகள் அல்லது நாற்றுகள் ஆரம்ப வெள்ளத்தை அதிக சேதமின்றி தாங்கும். இதனால்குறிப்பாக WZ இல்மீண்டும் நாற்றுக்களை நடுவதற்கு அவசியமில்லை. இது மாற்றியமைக்கட்ட நீரில் விதைக்கும் முறையாகும். மேலும் இது இலங்கையின் நெற் செய்கையில் சூழல் நேயமான, பொருளாதார சாத்தியமான நுட்பமாக கருதப்படுகிறது. இந்நுட்பத்தின் வெற்றியானது பொருத்தமான வர்க்கங்களை தேர்ந்தெடுத்தல் சிறந்த விவசாய முகாமைத்துவ திட்டங்களை அமைத்தல் என்பவற்றில் தங்கியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட (NIV) வர்க்கங்களான Bg 300, At 308, Bg 310, BW 351, Bw 367, Bg 366, Bg 380, Bg 379-2 என்பன மாற்றியமைக்கப்பட்ட நீரில் விதைக்கும் முறைக்கு பொருத்தமானவை. இலங்கையில் பரவலாக பயிரிடப்படும் நெல் வர்க்கங்களில் ஒன்றான Bg 300 எனும் மூன்று மாத வயதுடைய நெல் வர்க்கம் மிகப் பொருத்தமான வர்க்கமாகும். இவ் வர்க்கங்கள் ஓரளவு AG – தாங்குதிறன் கொண்டவை, ஏனைய அனைத்து நிபந்தனைகளும் (நல்ல தரமான வித்துக்கள், சரியான நெற் பாத்தி அமைப்பு, பொருத்தமான நாற்று நடுகை வீதம், ஆழமற்ற வெள்ள உயரம்) என்பன பூர்த்தி செய்யப்படும் போது அவை அதிக அடர்த்தியான, தானிய விளைச்சலை வெள்ளத்துடன் பெற்றுக்கொடுக்கும். நெல் விதைக்கும் போது முளைதிறன் 85% அதிகமான சான்றுப்படுத்தப்பட்ட நெல் விதையைப் பயன்படுத்த வேண்டும். அவை புதிதாக அறுவடை செய்யப்பட்டனவாகவும், உடைந்து, நிறமாற்றம் இல்லாமலும் நிரம்பிய அல்லது பாதி நிரம்பியவாக இருக்க கூடாது. முன்னைய போகத்தில் அறுவடை செய்யப்ப்பட்ட விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட வெப்பநிலை (250C) மற்றும் Rh (60 – 70%) நிலையில் நன்கு காற்றோட்டமான இடத்தில் களஞ்சியப்படுத்தி வைத்தால் வினைத்திறனுடையதாக இருக்கும். நீரில் விதைக்கப்படும் நெல்லில் விதைகள் 24-36 மணித்தியாலங்கள் நீரில் ஊறவைத்து, பின் விதைக்க முன்னர் 24 – 36 மணித்தியாலங்கள் முளைக்க வைக்கப்படும். எவ்வாறாயினும் மாற்றியமைக்கப்பட்ட முறையில் Wet – DSR பயன்படுத்தும் போது விதைகள்24 மணித்தியாலங்கள் நீரில் ஊறவைத்து 48 மணித்தியாலம் அடைகாப்பு செய்யப்படும்
DSR வெள்ளத்திற்கு பொருத்தமான ஈர DSR இன்நடுத்தர தடிப்பான வகைக்கு விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விதை நெல் தேவை ஒரு ஹெக்டேயரிற்கு 100 கிலோ கிராம் விதைப்பு வீதமாகும். விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட படி நிலம் தயார்ப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். விதைக்கும் போது 2 – 2.5 செ.மீ அளவு ஆழமாக நீர் பரந்திருக்குமாறு பேணுவதற்கு வயல் ஒழுங்காக மட்டப்படுத்தப்பட வேண்டும். அதிக விளைச்சல் மற்றும் குறைந்த களை வளர்ச்சியை பெறுவதற்கு நீர் மட்டம் அதே அளவில் 7-10 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். நீர்ப்பாசன நிலையில் வெள்ள நீரின் உயரம் 4-5செ.மீ அளவில் பேணலாம். நீரில் நெல் விதைத்தலில் கடினமான வித்து படுக்கையுடன் பெரிய மண்கட்டிகள் விதைகள் அமிழ்ந்து போகாமல் இருப்பதற்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. வெள்ள DSR இல் இதை பயிற்சி செய்யலாம். ஆனால் விதைப்பதற்கு முன் வெள்ள நீரை கிளறினால் மண்ணின் மேற்பரப்பில் விதைகளை ஒரு மெல்லிய சேற்று படையுடன் அமிழாமல் வைக்க வேண்டும்.
நெல் வயல்களில் பொதுவாக காணப்படும் புற்கள் மற்றும் செடி வகைகளை குறைப்பதனால் மாற்றியமைக்கப்பட்ட நீரில் விதைப்பு முறையில் களைகளை கட்டுப்படுத்த களைகொல்லி பயன்பாடு தேவையில்லை. எவ்வாறாயினும் நீர்வாழ் களைகள் இருப்பின் 2-3 நாட்களில் இல் பொருத்தமான களை கொல்லியை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரையின் படி பசளையிடல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, ஏனைய முகாமைத்துவ நடவடிக்கைகள் இடம் பெற வேண்டும். அதிக மழை மேக மூட்டமான காலப்பகுதியிலும் நீரின் வெப்பநிலை 280C விட அதிகமாக இருக்கும் போதும் விதைத்தல் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.