rrdi_technology_agronomy_MechanicalTransplanting_ta

RRID- Bathalagoda LOGO

தொழினுட்பங்கள்

பயிராக்கவியல்பிரிவு– இயந்திரமூலம்நெல்நாற்றுநடல்

பாய் நாற்று மேடையில் வளர்ந்த இளம் நாற்றுக்களை நடுவதற்குபின்னால் நடக்கும் தன்னியக்க தாவர நடுகை இயந்திரத்தை பயன்படுத்தி இயந்திர நடுகை நடைபெறுகிறது. சரியான நேரத்தில் பயிர் நடுதலுடன் சீரான இடைவெளி மற்றும் ஆழத்தில் நடுவதால் சீரான தாவரத் தொகையை உறுதி செய்யும் அதே நேரம் நெற்  செய்கையில் அதிக தொழிலாளர்களின் உழைப்பையும் களைகளின் பிரச்சினையும் குறைக்கிறது. (singh& Rao 2010)

ஒரு ஏக்கர் நெற் பயிர் நிலத்தை நடுவதற்கு சுமார் 30 சதுர மீற்றர் நாற்றுமேடை தேவைப்படும். வயலில் சேகரிக்கப்பட்ட உக்கிய மண் (தாவர பாகங்கள் கற்கள் இல்லாது இருக்க வேண்டும்) அல்லது சலிக்கப்பட்ட மண்ணினதும் கூட்டெரு கலவை பயன்படுத்தலாம். 60 செ.மீ அகலமும் 2.5 – 5 செ.மீ உயரமும் வசதியான நீளமும் உடைய உயர்த்தப்பட்ட நாற்றுமேடையை தயார் செய்து விதை நடுவதற்கு முன் 36-48 மணித்தியாலங்கள் விடப்படும். நாற்றுமேடை பொலித்தீன் தாளில் அமைக்கப்படுமாயின் நீர் வடிப்பை மேம்படுத்த பொலித்தீனில் சமனான அளவில் சிறிய துளைகளிட வேண்டும். நாற்றுமேடையின் ஏதாவது ஒரு புறம் மெல்லிய மண் படையை (1.5-2.5 செ.மீ) எடுத்து பொலித்தீனின் மேல்  சமமாக பரப்பி மட்டப்படுத்த வேண்டும்.  நாற்று தட்டுக்கள் பயன்படுத்தினால் (30 செ.மீ அகலம், 60 செ.மீ நீளம்) அவை  நாற்று மேடையில் இரு வரிகளாக ஒரங்கள் வரை சீராக மண்ணினால் மூடப்படுமாறு வைக்கப்பட வேண்டும். ஒரு ஏக்கர் நாற்று நடுவதற்கு 100 நாற்று தட்டுகள் தேவைப்படும்.

விதைகளை நாற்றுமேடையில் நடுவதற்கு முன் தொற்று நீக்கப்பட வேண்டும். 24 மணித்தியாலங்கள் நீரில் ஊறவைத்து (24 மணித்தியாலங்கள் அடைகாப்பு செய்யப்படுதல் வேண்டும்)நாற்றுமேடை காலத்தில் ஏற்படும் பணிப் பூச்சிகளை கட்டுப்படுத்த விதை சிகிச்சைசெய்தல் (இமிடக்ளோர்பிரிட் 70%WS அல்லது தியமெதோம் 70% அவசியமாகும்) தொற்று நிக்கப்பட்ட விதைகள் நாற்றுமேடைகளிலோ நாற்று தட்டுக்களிலோ  சமனாக பரப்பிவிட வேண்டும். நேரடி  சூரியஒளி, கடும் மழைலிருந்து தவிர்க்க  வாழை  இலைகள்,தென்னை ஓலைகள் அல்லது பொலித்தீனினால் நாற்றுமேடை மூடப்பட வேண்டும் 3-4 நாட்களின் பின்னர் நாற்று முளைத்த்தும் இந்த மூடுபடை அகற்றப்படும். முதல் 3-4 நாட்களின் நீரின்றிய நிலைமையை தவிர்க்க நாற்றுமேடைக்கு ஒரு நாளுக்கு இரு தடவை நீரை தெளிக்க வேண்டும். நாற்று மேடைகளுக்கிடையே தயார் செய்யப்பட்ட நீர் செல்லும் சால்களை பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்யலாம். நாற்று நடுவதற்கு 12-18 மணித்தியாலங்களுக்கு முன் நீரை வெளியேற்ற வேண்டும்.பொலித்தீன் தாளில் நாற்றுகள் நடப்பட்டிருப்பின் நாற்று நடும் இயந்திரத்தின் அளவுக்கு பொருத்தும் வகையில் நாற்று பாய் வெட்டப்படும்.

அதிக மட்டம் பெயரும் தன்மை நீண்ட பதிய வளர்ச்சியுடை நீண்ட நடுத்தர வயதுடைய நெல் வர்க்கங்கள் இயந்திர நடுகைக்கு மிகவும் பொருத்தமானவை. (உ + ம் Bg 403, Bg 379-2, Bg406, Bg 450, Bg 357, Bg 366, Bg 360, Bw 367, At 362, Bw 372, Co – 10) ஒரு ஏக்கர் நடுவதற்கு தேவையான விதை நெல் சுமார் 10 – 15 கிலோ கிராம் சான்றுப்படுத்தப்பட்ட விதைகளாகும். (20kg/acஅதிகப்பட்சம் அபாயத்தை தடுக்க) சம்பா வர்க்கங்களுக்கு 10-12 kg/acபோதுமானது. நாற்று நடுகைக்கு உகந்த விதை நடுகை வீதம் 500g/m2 ஆகும். நாற்று தட்டுகள் பயன்படுத்துவதாயின் 100 தட்டுகள் ac மற்றும் 100-150g நெல் விதை 1 தட்டுக்கு பயன்படுத்தலாம். 8-16 நாளுடைய நாற்றுக்களை (15 – 20செ.மீ உயரம்) நடுகைக்கு பயன்படுத்தலாம். ஆனால் 12 நாள் வயதுடைய நாற்றுக்கள் உகந்தது. பொருத்தமான வரிசைக்குரிய இடைவெளி 14, 16 cm மற்றும் 4 – 4 1/2 மாதநெல் வர்க்கத்துக்கு 16-18 செ.மீ 3 1/2 மாதநெல் வர்க்கத்திற்கு 12,14, 16செ.மீ ஆழத்தில் 4-6 நாற்றுக்களை ஒரு குழியில் நடுவது உகந்தது. நடுகை ஆழம் 1.5-2.5 cm (நடுத்தர) உகந்தது.

வயலை இரு முறை பண்படுத்தி தூர்வையாக்கி, சேறடித்து மட்டப்படுத்தி 24-48 மணித்தியாலங்கள் வைக்க வேண்டும். நாற்று நடும் போது ஆழமற்ற நிலையான நீர் படை 1-2 செ.மீ இருக்குமாறு பேணப்பட வேண்டும். நாற்று நட முன்னர் இயந்திரத்தை திருப்பும் போது ஏற்கனவே நடப்பட்ட நாற்றுக்களுக்கு சேதம்  ஏற்படாமலிருக்க  வயலின்  நான்கு புறமும்  இயந்திரம் ஒரு தடவை செல்லுமாறு சமனான பகுதியை வைத்திருக்க வேண்டும். வரிசைக்கு  இடையேயான  இடைவெளியை பேணுவதற்கும்  முன்னைய  வரிசைக்கு  சமாந்தரமாக  ஒவ்வொரு தடவை திரும்பி வருவது இருக்க வேண்டும். வயலின் நான்கு  மூலைகளும், நாற்று நடத் தவரிய குழிகளிலும் கைகளால் நாற்று நட வேண்டும்.

இயந்திரம் மூலம் நடப்பட  நாற்றுகளுக்கு களைகட்டுப்பாட்டை பின்வருமாறு மேற்கொள்ளலாம். I. 3 நாட்களின் பின் + 3-5 செ.மீ  நீர் நிரம்பிய வயலிற்கு முளைத்தலுக்கு முந்திய களைகொல்லி  பயன்படுத்தல். II.முளைத்தலுக்கு முந்திய களைகொல்லி + சக்தி களையெடுப்பு இயந்திரம். III  1-2 செ.மீ நீர் நிரம்பி 3-4 நாட்களின் பின் 3-5 செ.மீ நீர் நிரம்பிய பின் + முளைத்தலுக்குப் பிந்திய களைகொல்லி IVமுளைத்தலுக்குப் பிந்திய களைகொல்லி + சக்தி களையெடுப்பு இயந்திரம் (நடுவதற்கு 10 நாட்களுக்கு முன் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில்) V களைகொல்லி + நீர் முகாமைத்துவம் + சக்தி களையெடுப்பு என்பவற்றின் இணைப்பு இயந்திரம் அல்லது வலு களையெடுப்பு இயந்திரம் கைகளால் களை எடுத்தல்VIவிவசாய திணைகளத்தினால் பரிந்துரைக்கப்பட்டவாறு பசளை இடல், பீடை மற்றும் நோய் கட்டுப்பாடு ஏனைய விவசாய முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெரியதும் சதுரம் அல்லது செவ்வக வடிவிலான பாத்திகள் இயந்திர வினைத்திறனை அதிகரிக்கிறது.

இயந்திர நாற்று நடுகை சிறிய பாத்திகளை விட பெரிய பாத்திகளிக்கே அதிக  வினைத்திறனுடையது.குறிப்பாக மலைப்பகுதிகளில் படிமுறை  வயலிலும் குறுகிய வயல்களிலும் இயந்திரத்தை திருப்பவும் செலுத்தவும் கடினம். மேலும் சதுப்பு அல்லது அரை சதுப்பு மண்ணிலும் இயந்திரத்தை பயன்படுத்த முடியாது,நேரடியாக நடுவதுடன் ஒப்பிடுகையில் நாற்றுநடுகை இயந்திரத்தினால் நடுகை செய்யும் போது முதிர்ச்சி 7-10 நாட்கள் தாமதமாகும்.

நாற்றுமேடைபாயைதயாரித்தல்
நாற்றுநடுவதற்குநாற்றுமேடையைவெட்டுதல்
நாற்றுநடுவதற்குநாற்றுநடுகைஇயந்திரத்தைபயன்படுத்துதல்
இயந்திரத்தினால்நாற்றுநடப்பட்டநெல்வயல்