- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
தொழினுட்பங்கள்
பயிராக்கவியல் பிரிவு – அரிசி உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு நில ஒருங்கிணைப்பு
நெற் பயிர்ச்செய்கையில் சிறிய பாத்திகள் நீரின் அளவையும், இயந்திரங்களின் வினைத்திறனையும் குறைத்து பராமரிப்பு, வரம்பு அமைத்தல் என்பவற்றுக்கான தொழிலாளர் செலவை அதிகரிக்கிறது. மேலும் விவசாயிகளின் வருமானம் உற்பத்தியை குறைக்கிறது. சிறிய வயல் பாத்திகளை ஒருங்கிணைத்து பெரிய, சிறந்த வடிவமைப்புடைய பாத்திகளை அமைத்தல் சராசரி பாத்திகளின் அளவை அதிகரிக்கிறது. மேலும் ஏறத்தாழ 3-5% வீதமளவு பயிரிடும் நிலப்பரப்பை அதிகரித்திருக்கிறது. இது பயிரிடும் செலவையும் வரம்புகள் அமைப்பதற்கான தொழிலாளர் செலவையும் (சராசரியாக 5 மணிதன்ஹெக்டயார்) குறைக்கும் அதேவேளை விளைச்சலையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கிறது.
ஒரே உயரம் அல்லது 15செ.மீ உயர வேறுபாட்டைக் கொண்ட பாத்திகள் இணைப்பதற்கு பொருத்தமானவை. சாய்ந்த நிலங்களில் அமைந்த வயல் நிலங்களை ஹேல்மாலு நெற்செய்கை (படிக்கட்டு) தெரிவு செய்யக் கூடாது. இணைப்பதற்கு முன் நிலம் மற்றும் வரம்பு பகுதி அளவிடப்பட்டு சிறிய பாத்திகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலப்பகுதியினதும் களத்திட்டம் வரையப்பட்டு அகற்றுவதற்கும். நேராக்குவதற்கும் தேவையான வரம்புகள் குறிக்கப்படுகின்றன. பாத்திகளை மேற்பரப்பு மண்ணை குறைந்தபட்ச தொந்தரவுடன் இணைக்க வேண்டும். வரம்புகளை நேராக்குவதன் மூலம் ஒழுங்கற்ற வடிவத்திலிருந்த பாத்திகள் செவ்வக வடிவமாக மாற்றப்படுகின்றன. புதிய வரம்புகளை பழைய வரம்புகள் வயலில் இருக்கும் போதே அமைக்க வேண்டும். மேலும் அவற்றை புதிய வரம்புகள் கடினமானவுடன் முழுமையாக வெட்டி அகற்றல் வேண்டும். இணைத்த பின் விரிவாக்கப்பட்ட அனைத்து பாத்திகளும் ஒழுங்காக மட்டப்படுத்தப்பட வேண்டும். பெரிய பாத்திகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு,அகற்றப்படவரம்பு பரப்பளவு வீதத்தை அளவிடுவதற்காக அகற்றப்பட்ட வரம்புகளின் பரப்பளவு அளக்கப்படுகிறது.