- Address : Bathalagoda, Ibbagamuwa, Sri Lanka
- E- Mail : rrdi@doa.gov.lk
- Telephone : +94 372 258561
- Fax : +94 372 259881
அரிசி –பிரதான உணவு –பயிர் நாட்டுதல்
ஈரப்பாத்தி முறை
நாற்றுமேடை
நாற்றுமேடை அமைவிடம்.
- அதே வயலின் ஒரு பகுதியில் பயிர்கள் வளர்க்கப்படும்.
மொத்த பாத்தியின் அளவு நாற்று நடப்படவேண்டிய நிலப்பரப்பின் 1/10 பங்காகும்.
நாற்றுமேடையானது நிழலான இடத்தில் இருக்க கூடாது
நாற்றுமேடை அமைத்தல்
நாற்றுமேடை அமைக்கும் முன் மண்ணானது நன்கு சேராக்கப்பட்டு மட்டமாக்கப்பட்டது.
- சிறந்த நீர் முகாமைத்துவத்திற்காக வடிகாண்கள் பாத்திகளுக்கி டையில் அமைக்கப்படும்.
உக்கிய சேதன பொருட்கள் மற்றும் அசேதன அடிக்கட்டுப்பசளை இடப்படும்
நாற்றுக்களை வேரோடு பிடுங்க இடமளிக்கும்.
நாற்றின் வீரியத்தை அதிகரிக்கும்.
நாற்றுமேடை பராமரிப்பு
ஈரமான நிலையில் 5 நாட்கள் பேணப்படும்.
களைகள், பூச்சிகள்,நோய்கள் அற்றது.
போசணை குறைபாடுகள் அற்ற.
விதைநெல்
தேவையானளவு
கிட்டத்தட்ட 50 kg/ Ha
சிறிய நெல்மணி கொண்ட வர்க்கங்களுக்கு விதை விகிதமானது சரி செய்யப்படும்.
விதை தயார்செய்தல்
குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு ஊறவைக்கப்படும்(சுத்தமான நீரை பயன்படுத்தி).
48 மணித்தியாலங்களுக்கு முளைகட்ட விடப்படும் (சூடான உலர்ந்த இடத்தில்).
நாற்றுமேடை அமைத்தல்
விதைப்பதற்கு முன் நாற்றுமேடையிலுள்ள நீர் வடிக்கப்படும்.
ஏற்கனவே முளைத்த விதைகள் பாத்தியின் மீது சீராக வீசி விதைக்கப்படும்.
நாற்றுக்கள் நடப்பட்டதன் பின்,
நாற்றுமேடை தண்ணீரால் நிரப்பப்படும்.
நீர் மட்டமானது படிப்படியாக உயர்த்தப்படும்.
நாற்றுக்கள் 12-21 நாட்கள் வரை வைத்திருக்கப்படும் (வர்க்கத்தின் வயது வகுப்பை சார்ந்து ).
ஈர நாற்றுமேடைகள் நாற்றுக்களின் வேகமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுடன் நாற்றுக்களை இலகுவாக வேரோடு பிடுங்கவும் உதவுகிறது.