InternalAudit-Activites – ta

internalaudit

செயற்பாடுகள் மற்றும் சேவைகள்

எம்மைப்பற்றி

F.R 134ன் பிரகாரம் உள்ளக கணக்காய்வாளர் பிரிவானது திணைக்களத்தின் நிதி மற்றும் கணக்கியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள், திட்டங்களை செயற்படுத்துபவர்கள் அல்லது செயற்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை செயற்படுத்தும் மற்றும்  திணைக்களத்தால் வழங்கப்படும் வேலை மற்றும் சேவைகள் என்பவற்றை செயற்படுத்துபவர்கள் மற்றும் அவற்றில் ஈடுபடுபவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சுயாதீனமாக செயற்படுதல் வேண்டும். அதற்கிணங்க, விவசாய பணிப்பாளர் நாயகத்தினால் கீழ் கண்டவாறு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர் இத்திணைக்களத்தின் உள்ளக கணக்கு பரிசோதனையாளரில் ஒருவர். எனது சார்பில் இத் திணைக்கள அங்கங்களில் உள்ள சகல பதிவேடுகள், சாதனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை சோதனை செய்யவும் பொருட் பதிவேட்டையும், களஞ்சிய பொருட்களையும் சரிபார்க்கவும், தேவைப்படும் இடத்தில் வாக்கு மூலங்களை பதிந்து கொள்ளவும் இவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

செயற்பாடுகள்

நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி நாம் விவசாயத் துறையின் அனைத்து பிரிவினரையும் சரியான பாதையில் வழிநடத்தும் வகையில் பின்வரும் செயற்பாடுகளில் உச்ச கவனம் செலுத்தப்படுகின்றது.

  • F.R 133 ன் பிரகாரம் தாபன விதிக் கோவை, நிதி ஒழுங்கு முறைகள், பொது நிருவாக
    அமைச்சு , திறைசேரி மற்றும் கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றினால்
    வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவித்தல்களுக்கு இணங்க திணைக்களத்தின் நிதி
    மற்றும் நிருவாக முறைமைசெயற்பாடுகள் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை கண்காணித்தல்,
    வெளிப்படையான தன்மையுடன் உள்ளக ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டு முறைமை
    காணப்படுகின்றது என்பதில் திருப்தி கொள்ளல் மற்றும் சரியான திசையில் வழி நடத்தல்
  • பிழைகள் மற்றும் மோசடிகளை தடுக்க திணைக்களத்தில் நடைமுறைப் படுத்தப்படும் உள்ளக விசாரனை மற்றும் கட்டுப்பாடுகள் வடிவமைப்பு மற்றும் முறையான செயற்பாட்டில் வெற்றிகரமாக இருப்பதை உறுதிசெய்தல்
  • அனைத்து வகையான சேதங்களில் இருந்தும் திணைக்களத்தின் சொத்துகள் எந்தளவிற்கு
    பாதுகாக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தல்
  • விரையம், செயலற்ற மற்றும் அதிகபடியான செலவுகளை தடுப்பதோடு அவற்றை கண்டறியப் பயன்படுத்தப்படும் உள்ளக கட்டுப்பாட்டு அமைப்பின் தன்மையை ஆய்வு செய்தல்
  • எந்த ஒருசெலவினத்திற்கும் வழிவகுக்கும் துறை மற்றும் செயற்பாடுகள் திணைக்களத்தின் கணக்கு நடைமுறைகளை ஆய்வு செய்தல் திணைக்களத்தின் ஆதனங்கள் மற்றும் வளங்களை பாதுகாப்பாக சிக்கனமான முறையில் பயன்படுத்த படுகின்றதா என்பதை ஆய்வு செய்தல்