- விலாசம் - தபால் பெட்டி இல.18, பேராதனை, இலங்கை.
- மின்னஞ்சல் : etc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388098
- தொலைநகல் : +94 812 387403
விரிவாக்கற் பயிற்சி நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது - ETC
விரிவாக்க வேலைத்திட்டங்கள்
தேசிய உணவு உற்பத்தியினை மேம்படுத்துபவர்களான உழவர்களுக்கு அறிவு, திறமை மற்றும் எண்ணங்களை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கு தேவையான அறிவுரை சேவையினை வழங்குதல் விரிவாக்க வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
பரீட்சை
விவசாயப் பாடசாலைகளில் மாணவர்களை ஆட்சேர்த்துக் கொள்ளல் பயிற்சியாளர் மாணவர்களின் மதிப்பீடு மற்றும் திணைக்கள பணியாளர்களின் வினைதிறன் காண் தடை தாண்டிப் பரீட்சை போன்ற பரீட்சைகள் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கான முழு பொறுப்பும் பரீட்சை துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
விவசாய கல்வி வேலைத்திட்டம்
எங்கள் நிலையத்தின் கீழ் பதினோரு விவசாயப் பாடசாலைகள் செயற்படுவதுடன் அவற்றில் ஐந்தில் தேசிய தொழிற் தகைமை நிலை 6 (Nஏஞ-6) விவசாய உற்பத்தி தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா பாடநெறியும், ஆறில் தேசிய தொழிற்தகைமை நிலை 05 (Nஏஞ-5) விவசாய உற்பத்தி தொழிற் தொடர்பான தேசிய டிப்ளோமா பாடநெறியும் நடத்தப்படுகின்றது.
விவசாய பயிற்சி வேலைத்திட்டம்
விரிவாக்கற் பயிற்சி மையத்தில் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் நாடு முழுவதிலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மனிதவளத்தின் அறிவு, திறமை மற்றும் அணுகுமுறையினை மேம்படுத்துவதற்கான பயிற்சி வேலைத்திட்டங்கள் நடத்தப்படுகின்றது. இதற்காக இரண்டு சேவைக்கால பயிற்சி நிறுவனங்கள் மற்றும் நான்கு உழவர் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
வெளியீடுகள்
விவசவாயம் தொடர்பான பத்திரிகைகள், துண்டுப் பிரசுரங்கள் புத்தகங்கள் சுவரொட்டிகளை தயாரித்தல்.
விரிவாக்கற் பயிற்சி மையத்தில் நாங்கள்,
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்திதனை மேம்படுத்துவதற்காக உணவுப் பயிர்கள் உற்பத்தித் துறையில் உயர் செயல் திறனை அடைய முக்கிய பங்கு வகிக்கின்றது.
எமது பணி,
உணவு, போசணை, பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் முகமாக விரிவாக்கம், பயிற்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் மேம்படுத்துதல்.
நோக்கம்
நெல், மறுவயற்பயிர்கள், மரக்கறி, பழங்கள், கிழக்குப் பயிர்களின் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றைய நுகர்வோர் சேவையின் உற்பத்தித் திறனை உயர்த்துதல் எங்கள் துறையின் பிரதான நோக்கமாகும்.
பிரதான துறைகள்
- விரிவாக்கற் துறை
- பயிற்சி துறை
- கல்வி துறை
- பரீட்சை துறை
- விவசாய வணிக அபிவிருத்தித்துறை
நிபுணர்கள் ஆலோசனை சேவை
நிபுணத்துவ ஆலோசனை சேவையினை வழங்குவதற்காக மரக்கறி, பழங்கள், தானியங்கள் பற்றிய பிரதான விவசாய நிபுணத்துவ அதிகாரிகள் எங்கள் நிறுவனத்தில் உள்ளனர்.
- விஷேட உணவுப் பயிர்கள்
- நிபுணத்துவ ஆலோசகர்களுடன் தொடர்புகொள்ள
தொடர்பு கொள்ள
- முகவரி: விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையம், பழைய கலஹா சாலை, பேராதேனியா, இலங்கை
- மின்னஞ்சல் : director.etc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388098
- தொலைநகல் : +94 812 387403
- திறந்திருக்கும்: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை (சனி & ஞாயிறு மூடப்படும்)