Plant Pathology – RARDC KL – Tamil

பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் – கிளிநொச்சி

தாவர நோயியல் பிரிவு

தாவரங்களில் நோயை ஏற்படுத்தும் நுண்ணங்கி, சூழல் மற்றும் காரணிகளிற்கு இடையிலான தொடர்பு மற்றும் நோய்க்கட்டுப்பாடு தொடர்பான விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சி.

எதிர்கால நோக்கு

வயற்பயிர்கள் மற்றும் பிராந்தியத்திற்குரிய முக்கிய பயிர்களில் நோய்காரணமாக ஏற்படுகின்ற இழப்புக்களை குறைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், சுற்றாடலுக்கு ஏற்றமுறையிலும் நோய்களை கட்டுப்படுத்தும் உத்திகளை உருவாக்குதல்.

இப் பிரிவின் பிரதான நோக்கங்கள்
  • வயற்பயிர்கள் மற்றும் பிராந்தியத்திற்குரிய முக்கியமான பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • தாவரநோய்களை இனங்கண்டு அதற்குரிய தாவர மருத்துவ சேவைகளை விவசாயிகளிற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் வழங்குதல்.
  • தாவரநோய்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்களையும் உயிர் நோயியல் முறைகளையும் உருவாக்குதல்.
  • பிராந்தியத்திற்கான பயிர்களில் நோய்களை அடையாளம் காணுதல்.
  • காளான் வளர்ப்பு தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
  • தாவரநோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவை சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு அடையாளம் காணுதலும் மதிப்பிடலும்.
  • எதிர்ப்பினங்கள், சகிப்புத்தன்மைகொண்ட மற்றும் பிரதான நோய்களிற்கு எதிர்ப்பைக்காட்டும் கலப்பினங்களை அடையாளம் காணுதல்.
  • ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையை மேற்கொள்ளல்.
இப்பிரிவின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்

திரு. P.G.H.M.N.S. ஹேரத்

உதவிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி)

பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்

கிளிநொச்சி