- Address : Iranaimadu Junction, Kilinochchi
- E- Mail : rardcnr@yahoo.com
- Telephone : +94 212 285406
- Fax : +94 212 285406
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் – கிளிநொச்சி
தாவர பூச்சியியல் பிரிவு
வட பிராந்தியத்தில் ஏனைய களப் பயிர்கள் மற்றும் பூங்கனியியல் பயிர்கள் மீது தாவர பூச்சியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் உச்ச நிலையை அடைதல்.
பூச்சிகளின் தாக்கம்
- மிளகாயில் பனிப்பூச்சியின் தாக்கம்.
- சோளத்தில் படைப்புளுவின் தாக்கம்.
- வெங்காயத்தில் இலைஅரிபுளுவின் தாக்கம்
தேவையான பொருட்கள்
- உள்ளி – 1 Kg
- பச்சைமிளகாய் – ½ Kg
- இஞ்சி – ½ Kg
தயாரிக்கும் முறை
உள்ளியை 12 மணி நேரம் மண்ணெண்ணயில் ஊறவைத்து பின்னர் அதன் தோலை அகற்றி நன்றாக அரைத்தல் வேண்டும். பின்னர் மேற்குறிப்பிட்டளவுள்ள இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தனித்தனியே அரைத்தல் வேண்டும். பின்னர் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 2 லீற்றர் தண்ணீரில் கலந்து துணியினால் வடிகட்டி அதன் சாற்றினை பிழிந்து எடுத்தல் வேண்டும். பிழிந்தெடுத்த 1 லீற்றர் சாற்றுடன் 10 லீற்றர் தண்ணீரை நன்கு கலந்த பின்னர் தாவரங்களுக்கு விசிறவேண்டும்.
3G திரவத்தின் பயன்பாட்டு விகிதம்
- 10% (v/v) 3G கரைசலினை பனிப்பூச்சி தாக்கமுள்ள மிளகாய் பயிருக்கு காலையில் விசிறவேண்டும்.
- இரண்டு வார இடைவெளியில் இப்பிரயோகத்தினை மேற்கொள்ளலாம்
பூச்சி – மிளகாய் பனிப்பூச்சி
செய்முறை – 1 லீற்றர் தண்ணீரில் 10 கிராம் அளவுள்ள அபதைற்று கலந்து 10மூ (றுஃஏ) கல்சியம் பொஸ்பேற் நீர்க்கரைசலைத் தயாரித்தல். அத்துடன் பயன்;பாட்டிற்கு முன்னர் சிறியளவிலான ளரசகயஉவயவெ ஐச் சேர்த்து விசிற வேண்டும்
.
பயன்பாட்டு விகிதம் –ஆரம்ப கட்ட பிரயோகமானது பயிர் நடப்பட்டு 2 வாரங்களில் மேற்கொள்ளப்படும். அத்துடன் கரைசலானது தயாரிக்கப்பட்ட உடனேயே பயிர்களுக்கு அதிகாலையில் தெளிக்கப்படும்.
பூச்சி – கீரைத்தண்டு துளைப்பான்
செய்முறை – 200 கிராம் அளவுள்ள கற்பூரவள்ளி இலையை நன்கு அரைத்தல் வேண்டும்.
பின்னர் அரைக்கப்பட்ட கரைசலுடன் 1 லீற்றர் தண்ணீர் கலந்து துணியொன்றினால் வடிகட்டி கற்பூரவள்ளி இலைச்சாற்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
பயன்பாட்டு விகிதம் – (20% w/v) கற்பூரவள்ளி இலைச்சாற்றினை பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நேரடியாக பிரயோகிக்கலாம்.
இதனை ஒரு வார இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.
பீடை – கீரைத்தண்டு துளைப்பான்
செய்முறை – 500 கிராம் வேப்பம் விதைகளை எடுத்து அதன் கோதை அகற்றுதல் வேண்டும்.
பின்னர் 10 லீற்றர் தண்ணீரில் 48 மணி நேரம் ஊறவைத்து அரைத்து துணியொன்றினால் வடிகட்டி வேப்பம் விதைச்சாற்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
பயன்பாட்டு விகிதம் – 5% w/v வேப்பம் விதைச்சாற்றினைப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நேரடியாக பிரயோகிக்கலாம்.
இதனை ஒரு வார இடைவெளியில் மேற்கொள்ளவேண்டும்.
பீடை – நிலக்கடலையில் வெண்புழுவின் தாக்கம்
செய்முறை –
- 500Kg பச்சை வேப்பமிலைகளை நேரடி சூரியஒளியில் 4-5 நாட்களுக்கு காயவிட வேண்டும்.
- 150Kg நன்கு காய்ந்த வேப்பமிலைகள் மற்றும் 150Kg வேப்பம் விதைகளை தனித்தனியே நன்கு அரைத்தல் வேண்டும்.
- பின்னர் இரண்டையும் நன்கு கலந்து 300Kg அளவுள்ள வேப்பம் கலவையைப்; பெற்றுக்கொள்ளலாம்.
பயன்பாட்டு விகிதம் – பயிர் நடுகை செய்வதற்கு முன்னும் அத்துடன் பயிர் நடுகை செய்து ஒரு மாதத்திற்குப் பின்னும்; ஒரு ஏக்கருக்கு 300Kg என்னும் விகிதத்தில் வேப்பம் கலவையைப் பிரயோகித்து மண்ணுடன் நன்றாகக் கலக்க வேண்டும்.
பீடை – சோளத்தில் படைப்புழுவின் தாக்கம்
செய்முறை
- மரவள்ளியை சோளம் பயிரிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பயிரிடுதல் வேண்டும்.
- சோளத்தினை 3 வரிசைகளிலும் மரவள்ளியை ஒரு வரிசையிலும் நட்டு களத்தினைச் சுற்றி எல்லைப்பயிராக நேப்பியர் புல்லை நடுதல் வேண்டும்.
பீடை – மிளகாய் வேர் முடிச்சு நெமற்றோடு (Chili Root Knot Nematode (CRKN))
செய்முறை
- மண்ணின் பல்லுயிர்ப் பாதுகாப்பு
- கிருமிநீக்கம் செய்தல்
- நிலம் பண்படுத்தல்
- காவிகள் மற்றும் களைகளை அகற்றுதல்
- நாற்று மேடைக்கு சூரியஒளிப்பரிகரணம் மேற்கொள்ளல்.
- மண்ணிற்கு சுடுநீர்ப்பரிகரணம் செய்தல்.
- ஆவியூட்டல்
- எரித்தல் மற்றும் வெள்ளப்படுத்தல்
- தாவரப்பகுதிகளை தொற்று நீக்கம் செய்தல்
- Novel முறைமை
- சொட்டு நீர்ப்பாசனம்
- பயிர் சுழற்சி
- தாவர கழிவு முகாமைத்துவம்
- போசணை முகாமைத்துவம்
- மண் சேர்க்கை
- Bio Fumigants
- உயிரியல் கட்டுப்பாட்டு முறை
இப்பிரிவின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்
திரு . சி. ராஜேஸ்கண்ணா
உதவிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி)
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
கிளிநொச்சி
- +94 212 285406
- +94 778 888194
- rrsmurunkan@gmail.com