- த

- விலாசம் - தபால் பெட்டி இல.18, பேராதனை, இலங்கை.
- மின்னஞ்சல் : etc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 388098
- தொலை நகல்: +94 812 387403
விரிவாக்கற் பிரிவு
விரிவாக்கற் பயிற்சி நிலையத்தின் (ETC) விரிவாக்கற் பிரிவின் முக்கிய செயல் தொடர்ச்சியாக அனைத்து விவசாய தொழில்நுட்பங்ளையும் பல்வேறு விரிவாக்கல் அணுகுமுறை மூலம் பெரு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் ஆங்காங்கே உள்ள ஆறு இடை மாகாணங்களிலும் (அம்பாறை, அனுராதபுரம், அம்பாந்தோட்டை, ஹசலக,மொனராலை,பொலன்னறுவை) விவசாயம் தொடர்பான அனைத்து பங்குதாரர்களிடேயேயும் பரப்புதலாகும். இக்கொள்கைகளுக்கு மேலதிகமாக விரிவாக்க நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகளின் கொள்கையை பரப்புவதற்காக PTWG உடன் ஒருங்கிணைந்து போகக் கலந்தரையாடல்களை நடாத்துதல், எலபொஜூன் (Hela bojun) க டைகளை ஸ்தாபித்தல், உள்ளீடுகளை விநியோகித்தல் போன்றவற்றை நாடு முழுவதும் விஷேடவேலைத்திட்டங்கள் மூலம் மேற்கொள்ளல். விரிவாக்கற் பிரிவில், விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நெல், மறுவயற்பயிர்கள் (OFC) பழங்கள், மரக்கறிகள், பயிர்பாதுகாப்பு,தேனீவளர்ப்பு, மகளீர் விவசாய விரிவாக்கம், இளம் விவசாயிகள் கழகம், தாவரப் போசனை,சேதனப் பசளை, காலநிலைக்கு நிலையான விவசாயம் மற்றும் நீர்ப்பாசன முகாமைத்துவம் , நடமாடும் விரிவாக்கற் சேவை புகையிலை பயிர்ச்செய்கையினை கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு உப அலகுகள் உள்ளன.

பணி
இடைமாகாணம், மாவட்ட விரிவாக்கற் திட்டங்கள், மற்றைய தொடர்புடைய அபிவிருத்தி திட்டங்களின் ஒருங்கிணைப்புடன் உள்ளூர் உணவு உற்பத்தியின் மேம்படுத்தல்.
நோக்கங்கள்
- வினைதிறனான விவசாய விரிவக்கற் சேவைக்காக தேவையான வசதிகளை வழங்கி நாடு முழுவதிலும் ஆங்காங்கே உள்ள குறிப்பிட்ட நிலையங்களால், நவீன விவசாய சேவைகளை தொடர்பாடல் முறைகளை மேற்கொள்ளல்.
- கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் உணவு உற்பத்தி செயல்முறையினை பின்னூட்டல் மூலம் தேசிய அளவிலான பயிர்ச்செய்கை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தல்.
- பண்ணை மகளிர் தொழிற்துறை விருத்தி திட்டங்கள் மூலம் மகளிர் வருவாயினை மேம்படுத்தல்.
- இளம் விவசாயிகள் கழகத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் இளைஞர்களை விவசாயத் துறையில் வழிநடத்துவதற்கு களமட்டச் செயற்பாடுளை வலுப்படுத்தல், கண்காணித்தல், மேற்பார்வை செய்தல்.
நடவடிக்கைகள்
- மேலதிகப் பணிப்பாளருக்கு கீழுள்ள அலகுகளை மேற்பார்வை செய்தல், ஒருங்கிணைத்தல். இடைமாகாண பிரதேச வருடாந்த செயற்திட்டகங்ளை அமுல்படுத்தல்.
- முன்னேற்ற விமர்சனக் கூட்டங்கள் முன் போகக் கலந்துரையாடல்கள் மற்றும் அது தொடர்பான கூட்டங்களை நடத்துதல்.
- கள விஜயம்
- தொழில் நுட்பச் செயற்பாடுகள்
அலகுகள்
- இடை மாகாண அலுவலகங்கள்
- அம்பாறை
- அநுராதபுரம்
- ஹம்பாந்தோட்டை
- கண்டி
- மொனராகலை
- பொலன்னறுவை
- பூங்கனியியல் மற்றும் பயிர் பாதுகாப்பு
- மகளிர் விவசாய விரிவாக்கம்
- இளைஞர் விவசாயக் கழகம்
- தேனீ அபிவிருத்தி அலகு
- காலநிலை அடிப்படையிலான விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவ தொகுதி
- தாவரப் போசணை மற்றும் சேதன வேளாண்மை
- மறுவயற் பயிர்கள்
- நடமாடும் விவசாய ஆலோசனை சேவை
- நெற் பயிர்ச் செய்கை
- மண் பாதுகாப்பு

மேலதிக பணிப்பாளர் (விரிவாக்கம்)
திரு. ஜெ. ஆர். சுதசிங்க
- +94 812 387405
- +94 718 353388
- addldirector.ext@gmail.com
தொடர்பு கொள்ள
- முகவரி: விரிவாக்கம் மற்றும் பயிற்சி மையம், பழைய கலஹா சாலை, பேராதேனியா, இலங்கை
- மின்னஞ்சல் :etc@doa.gov.lk
- தொலைபேசி : +94 812 387405
- தொலைநகல்: +94 812 387403
- திறந்திருக்கும்: திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை (சனி & ஞாயிறு மூடப்பட்டது)
பயனுள்ள இணைப்புகள்
விவசாய அமைச்சகம்
விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான இலங்கை கவுன்சில் (CARP)
அரசு தகவல் மையம்