ETC-Agri. education division – tamil

கல்வி பிரிவு

நாட்டின் விவசாயத் துரைக்குத் தேவையான நடுத்தர அளவிலான தொழில்நுட்ப மனித வளங்களை உற்பத்தி செய்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான விவசாயக் கல்வியை வழங்க விரிவாக்க மற்றும் பயிற்சி மையத்தின் கல்விப் பிரிவு உதவுகிறது. விவசாயப் பள்ளிகள் மூலம் நடத்தப்படும் , விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா (NVQ 6) மற்றும் விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில்  தேசிய டிப்ளோமா (NVQ 5) ஆகியவை கல்விப் பிரிவால் மேற்பார்வையிடப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. NVQ  நிலை 6 பாடத்திட்டம் அங்குனுகொலபெலச, கரபின்சா, குண்டசாலை, பெல்வெகர மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. NVQ  நிலை 5 பாடநெறிகள் அனுராதபுரம், பிபிலை, லபுதுவை, பாலமுனை பரந்தன் மற்றும் வாரியபொல ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

நோக்கு

இலங்கையில் நிலையான விவசாய மேம்பாட்டுக்கு விவசாய கல்வி மூலம் மனித வள மேம்பாடு.

குறிக்கோள்

1. டிப்ளோமாதாரிகளை உருவாக்கல்.

2. பாடத்திட்டத்தை மேம்படுத்தல், புதுப்பித்தல்.

3.விவசாய கல்வியின் தரத்தை பராமரித்தல்.

நடவடிக்கைகள்

1. விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா  பாடநெறியினை நடத்துதல் (NVQ நிலை 6)

2. விவசாய உற்பத்தி தொழில்நுட்பத்தில்  தேசிய டிப்ளோமா  பாடநெறியினை நடத்துதல் (NVQ நிலை 5) 

3. பாடத்திட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள்.

4. கல்வி மற்றும் கல்வி நிறுவன தரத்தினை பராமரித்தல்.

5. கோரிக்கைகளின் அடிப்படையில் அரசபள்ளி மாணவர்கள், விவசாயிகள்,ஆசிரியர்கள், மற்றும் பிற நிறுவன அதிகாரிகளுக்கு  விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல்.

6. அரசு,அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை பயிற்சிக்கு (OJT) மாணவர்களை  வழிநடத்துதல்.

7. விரிவுரையாளர்களுக்கான சேவைக்காலப் பயிற்சிகள் ஏற்காடு செய்தல்.

அலகுகள்

  1. விவசாயப் பாடசாலை அகுனுகொலபெலச.
  2. விவசாயப் பாடசாலை கரபின்சா.
  3. விவசாயப் பாடசாலை குண்டசாலை.
  4. விவசாயப் பாடசாலை பெல்வெகர.
  5. விவசாயப் பாடசாலை வவுனியா.
  6. விவசாயப் பாடசாலை அனுராதபுரம்.
  7. விவசாயப் பாடசாலை பிபிலை.
  8. விவசாயப் பாடசாலை பாலமுனை.
  9. விவசாயப் பாடசாலை லபுதுவை.
  10. விவசாயப் பாடசாலை பரந்தன்.
  11. விவசாயப் பாடசாலை வாரியபொல.
24-512

பிரிவுத் தலைவர் மேலதிக பணிப்பாளர் (கல்வி)

திருமதி. கே. சீதா வயலட்

தொடர்பு கொள்ள