குடிமுறைப் பொறியியல்
நாங்கள் பொறியியல் பிரிவின் கீழ் உள்ள முக்கிய அலகுகளில் ஒன்று. எங்கள் பிரிவு, விவசாயத் திணைக்களத்தின் (DOA) அனைத்து குடிசார் பொறியியல் பணிகளுக்கும் ஆலோசனை மற்றும் மேற்பார்வையை வழங்குகிறது. அதன் கீழ் உள்ள முக்கிய செயல்பாடுகள், அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் கட்டடக்கலை வடிவமைப்புகளை வழங்குதல், அவற்றுக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தல், கொள்முதல் பணிகளைச் செயல்படுத்துதல், கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் பணம் செலுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குதல் ஆகியவை ஆகும்.
சேவைகள்
அனைத்து கட்டுமான மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்; அனைத்து குடிசார் பொறியியல் மற்றும் கட்டிடக்கலைப் பணிகளின் வடிவமைப்பு, திட்டமிடல், மேலாண்மை மற்றும் முன்னேற்ற மீளாய்வு ஆகியவற்றை மேற்கொள்வது.
அனைத்து குடிசார் பொறியியல் பணிகளுக்கும் வடிவமைப்புத் திட்டங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் திட்ட சாத்தியக்கூறு ஆய்வுகளில் பொருள், உபகரணங்கள் மற்றும் தொழிலாளர் தேவைகளை மதிப்பிடுதல்.
அனைத்துக் கட்டிடங்கள், கட்டமைப்புகள் மற்றும் கட்டுமானங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதோடு, அனைத்துப் பராமரிப்பு மற்றும் சேவைப் பணிகளையும் முறையாகவும் குறித்த நேரத்திலும் திட்டமிட்டு, செயல்படுத்தி, நிர்வகித்தல்.
அனைத்து கட்டிடக்கலை, குடிசார் பொறியியல் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தல்
மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் உரிய கொடுப்பனவுகள் குறித்த பரிந்துரையை வழங்குதல்.
