05. Rambutan Research Unit – Eraminigolla -Ta

ரம்புட்டான் ஆராய்ச்சி பிரிவு - எரமினிகொல்ல

அறிமுகம்

இந்த அலகு கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன செயலக பிரிவின் அந்திரமடா கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த எரமினிகொல்லா கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு ரம்புட்டான் மற்றும் ரம்புட்டான் வகைகளைப் பாதுகாப்பது குறித்து சிறிய ஆராய்ச்சி நடைபெறுகின்றது. கூடுதலாக, தாய் தாவரங்களும் காணப்படுகின்றன. நடுகை தாவரங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, நாற்றுகள் விற்கப்பட்டு, நடுகை தாவரங்கள் திணைக்கள திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன. 122 ரம்புட்டான் மரங்கள், 10 ஒட்டு பலா மரங்கள் மற்றும் 15 ஒட்டு இலந்தை பழ மரங்கள் உள்ளன. இந்த அலகு 1.912 சதுர ஹெக்டேயார் பரப்பளவைக் கொண்டுள்ளது. விளைச்சல் சுதேச தாவரங்களில் ரம்புட்டான் விளைச்சலும் ஒரு முக்கிய வருமான மார்க்கம் ஆகும்.

நிறுவனத்தின் வரலாறு
இந்த மையம் 1967 இல் முக்கியமாக ரம்புட்டான் பயிர் மேம்பாட்டிற்காக நிறுவப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 95 அரும்பொட்டு செய்த  ரம்புட்டான் மரங்களின் எண்ணிக்கை தற்போது 122 மரங்களாக அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து 1998 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முறையே 10 அரும்பு ஒட்டு பலா நாற்றுகள் மற்றும் 15 அரும்பு ஒட்டு இலந்தைப் பழ நாற்றுகள் நடப்பட்டன.
bg

குறிக்கோள்கள்

தேசிய செழிப்பு மற்றும் ஆரோக்கியமான தேசத்திற்கான உயர்வை அடைய பழத்துறையின் அபிவிருத்தி.

bg

சேவைகள்

  • ரம்புட்டான் பயிர் செய்கை மற்றும் மேம்பாடு தொடர்பான செய்முறை பயிற்சிகளை வழங்குதல்
  • நடுகை பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம்

  • விவசாயிகளுக்கான ஆலோசனை சேவைகள்

bg

பிரிவுகள் மற்றும் தொடர்புடைய சேவைகள்

டபிள்யூ.டி.ஆர். கருணாரத்ன

டபிள்யூ.டி.ஆர். கருணாரத்ன

பண்ணை மேலாளர் - பொறுப்பான அதிகாரி

தொடர்பு கொள்ள