விதையிடுவதற்கும் நாற்றை நடுவதற்கிம் தேவையான இயந்திர உபகரணங்கள்

விதைகளை விதைக்கும் போது பலவித காரணிகள் பாதிக்கும். இதில் நடுவதற்கான ஆழம் ஒரு முக்கிய காரணியாகும். அத்தோடு நாட்டப்படும் விதை மற்றும் நாற்றிட்கு இடையிலான இடைவெளி மிக முக்கியமான காரணியாகும். விவசாயத்திற்கு போலவே பெருந்தோட்ட செய்கைக்கும் இவ்வுபகரணங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறான சில உபகரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.


வீட்டுத் தோட்ட விதை நடுகை உபகரணம் (Garden Seeder)

போஞ்சி, கரட், பீற்றுட், முள்ளங்கி, மற்றும் குரக்கன், சோளம் ஆகியவற்றை நாட்டுவதற்கு உபயோகிக்கக்கூடிய கைகளால் தள்ளிச்செல்லக்கூடிய எளிதாக உபகரணமாகும். மேலும் விதைகளை விதைக்கும் களத்தில் மண்ணை விலக்கி விதைகளை விழ செய்வதோடு அதனை மூடிவிடல் இதனால் பெறப்படும் மேலதிக நன்மையாகும்.


உருளை வடிவ விதை நடுகை உபகரணம் (Prum Seeder)

நெல் விவசாயத்தின் போது நெல் விதைகளை விதைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டதாகும்.பின்புறமாக செல்லக்கூடிய வகையில் பின்நோக்கி இழுத்துச் செல்ல வேண்டும். விதைகளுக்கு இடையில் 20mm இடைவெளி காணப்படும் வகையில் நான்கு வரிசைகளில் விதைகளை ஒரே தடவையில் விதைக்க முடியும்.


விதையிடு கருவி

நன்கு சில்லு உழவு இயந்திரத்திற்கு முட்கலப்பைக்கு பொருத்தி இயக்க கூடிய இவ்விதையிடு கருவி மூலம் சோயா அவரை பயறு கௌபீ உழந்து சோளம் ஆகிய பயிரிகளின் விதைகளை ஒரே நிரலில் விதைக்க கூடியதாக காணப்படல் இதன் விசேட தன்மையாகும்;. ஒரே நேரத்தில் 3-6 கிடையான நிரல்களில் விதைக்க கூடியதாக காணப்படல். நன்றாக பண்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு நாளில் 5 ஏக்கருக்கு விதைகளை விதைக்க கூடியதாக இருப்பதால் பெரிய அளவில் பயிர்ச் செய்கையை மேற்க்கொள்ளும் விவசாயிகளுக்கு வினைத்திறனாக பயன்படுத்த கூடிய உபகரணமாகும்.


நெல் நாற்று நடுகை உபகரணம் (Paddy Transplanter)

கைகளால் இயங்கும் இவ்வுபகரணமானது பின்னோக்கி இழுத்துச் செல்வதன் மூலம் கன்றுகளை நாட்டலாம்.கன்றுகளை நடும் ஆழம் 0.5cm - 4cm வரை வேறுபடும். இவ்வாறு நடப்படும் கன்றுகளுக்கான இடைவெளி 20cm ஆகும். நிரல்களில் 6 கன்று என நாட்ட முடியும்.மனித சக்தியால் இயக்கப்படும்


இயந்திர முறையில் இயங்கும் நெல் நாற்று நடுகை உபகரணம்

இயந்திர முறையில் பின்னோக்கி இயங்குவதால் பின்னோக்கிச் செல்லும் வகையில் இயங்க வேண்டும்.கன்றுகள் நாட்டுவதற்கான ஆழம் 7mm - 37mm ஆகும். நிரல்களுக்கான இடைவெளி 300mm ஆகும்.


ரொடரி விதையிடு கருவி

மிதித்திதுக் கொண்டு செல்லும் இவ் உபகரணத்தை இயக்கும் விவசாயிகளுக்கு குறைந்;த வேகத்தில் மற்றும் இலகுவாகவும் கன்றுகளை நாட்ட முடியும். உழுந்து பயறு கௌபீ சோளம் சோயா அவரை ஆகிய விதைகளை ஒரு நிரலில் விதைக்க உபயோகிக்கப்படும். ஒரு நாளில் 1 ½ ஏக்கருக்கு விதைகளை வினைத்திறனாக விதைக்க கூடியதாக காணப்படல். இரண்டாம் நிலத்தை பண்படுத்தும் போதே விதைகளை விதைப்பதால் இதற்கான செலவும் காலமும் மிகுதியாகும்..