- த
TP : +94 812 388494 E-Mail : pgrc.doa@gmail.com
- தமிழ்
Home -PGRC | Downloads | Publications | Staff
வித்து காப்பு பிரிவு / வித்து பரம்பரையலகு வங்கி
வித்து காப்பு பிரிவானது தாவர பிறப்புரிமை மூலவளங்கள் நிலையத்தின் முக்கிய பிரிவாகும். இது உத்தம களஞ்சிய நிபந்தனைகளை வழங்குவதோடு விதையின் ஈரப்பதன் மற்றும் களஞ்சிய வெப்பநிலையை குறைப்பதன் மூலம் வித்தின் வாழ்த்தகவினை நீண்டகாலத்திற்கு பராமரிக்க உதவுகின்றது. விதைகளை பதப்படுத்துதல், பராமரித்தல் மற்றும் வித்தின் வாழ்தகவை கண்காணித்தல், காப்பு செய்யப்பட்ட மூலவளங்களை பாதுகாத்தல் மற்றும் விநியோகம் செய்தல் போன்ற பல செயற்பாடுகளை வித்து பரம்பரையலகு வங்கி கொண்டுள்ளது.
இரண்டு முக்கியவகை சேகரிப்புகள் வித்து பரம்பரையலகு வங்கியில் காப்பு செய்யப்படுகின்றன.
உயிர்ப்புள்ள சேகரிப்பு – வித்துக்கள் 50c வெப்பநிலை மற்றும் 25 – 30% சார்ஈரப்பதனில் குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு சேமிக்கப்படும். இது ஒரு செயற்பாட்டிலுள்ள சேகரிப்படும் மற்றும் இது மீள் உருவாக்கம், மதீப்பீடு, ஆராய்ச்சி மற்றும் விநியோக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
அடிப்படை சேகரிப்பு – வித்துக்கள் நீண்டகாலத்திற்கு வாழ்தகவை தக்கவைக்கும் நிபந்தனைகளின் கீழ் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. வித்துக்கள் காற்றுபுகாத கொள்கலன்களில் அடைக்கப்பட்டு,
வெப்பநிலையில் களர்சியப்படுத்தப்படுகின்றன. அடிப்படை சேகரிப்பு. விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பாதுகாப்பிற்காக களர்சியப்படுத்தப்படுகின்றது.
2024ல் அதாவது இதுவரையில் பரம்பரையலகு வங்கியில் பதிவு செய்யப்பட்ட வித்து பிறப்புரிமையியல் வகைகளின் எண்ணிக்கை சுமார் 17,000 ஆகும். மேலும் இது பின்வரும் பயிர் குழுக்களை உள்ளடக்கியது.
அரிசி, பிற தானியங்கள், தானிய பருப்பு வகைகள், காய்கறி, பருப்பு வகைகள் சொலனேசியல் காய்கறிகள் மற்றும் சுவையூட்டிகள், வெள்ளரிகள், பிரசிகேசியே காய்கறிகள், அல்லியம், இலை காய்கறிகள்,வேர் மற்றும் கிழங்குகள், கடுகு, எண்ணெய் பயிர்கள் நார் பயிர்கள், மருத்துவ தாவரங்கள் மற்றும் பழங்கள்