பெரிய வெங்காயம்

பெரிய வெங்காயம்

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

பூசா சிவப்பு (Pusa red)

ராம்பூர் ( Rampure)

கல்பிட்டி தேர்வு (Kalpitiya selection)

நாசிக் சிவப்பு ( Nasic red)

கீழே காட்டப்பட்டுள்ள வர்க்கங்கள் அவைகளின் உயர்ந்த விளைச்சல் தன்மை, நடுகை செய்வதற்கு பொருத்தமான விதைகள், களஞ்சிய இசைவாக்கம், காரத்தன்மை ஆகிய சிறப்பம்சங்களைக் கருத்திற் கொண்டு இலங்கையின் கால நிலைமைகளுக்கு ஏற்ற வர்க்கங்களாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

பூசா சிவப்பு (pusa red)

இவ் வர்க்கம் இந்தியாவின் புது டில்லியிலுள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவன்தினால் (IARI) விருத்தி செய்யப்பட்டது. இது இலங்கையின் உலர் வலயங்களுக்கு மிகவும் பொருத்தமானது. பயிர் முதிர்ச்சியடைவதற்கு 90-100 நாட்கள் ஆகும். ஒரு ஹெக்டயருக்கு 20-25 வரையான சராசரி விளைச்சளைத் தரும். லேசான ரோஜா பூவின் நிறத்தைக் கொண்டதும் அதிக கார சுவையும் கொண்டதுமாகும்.

ராம்பூர் ( Ramoure)

இவ் வர்க்கத்தின் ஆரம்பம் இந்தியா. இது இலங்கையின் உலர் வலயங்களுக்கு மிகவும் பொருத்தமானது. பயிர் முதிர்ச்சியடைவதற்கு 85-90 நாட்கள் வரை செல்லும். ஒரு ஹெக்டயருக்கு 15-20 மெ.டொன் வரையான விளைச்சளைத் தரும். சிறந்த முறையில் களஞ்சியப்படுத்தக்கூடிய. லேசான ரோஜா பூவின் நிறத்தைக் கொண்டதும் அதிக கார சுவையையும் கொண்டது.

“ஏகிரி பவூன் லைட் ரெட்” (Agri found light red)

இவ் வர்க்கம் இந்தியாவில் பெரும் தொகையாக தெரிவு செய்யப்பட்டு விருத்தி செய்யப்பட்டதாகும். இது உலர் வலயங்களில் நீரைப் பாய்ச்சி சிறு போக பயிராக செய்கை பண்ணப்படுவதற்கு இசைவாக்கம் கொண்டது. இளம் சிவப்பு நிறத்தையுடைய இது முதிர்ச்சியடைவதற்கு ஏறத்தாழ 90-100 நாட்கள் ஆகும். ஒரு ஹெக்டயருக்கு 15-20 வரையான சராசரி விளைச்சளை தருவதோடு நன்றாக களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாகும்.

கல்பிட்டி தேர்வு (Kalpitiya selection)

குமிழ் லேசான ரோஜா பூவின் நிறத்தை கொண்டது. நடுத்தரமான காரத்தன்மை கொண்டது. பயிர் முதிர்ச்சியடைவதற்கு 85-90 நாட்கள் எடுக்கும்;.

என் 53 ( N 53)

குமிழ்கள் கருமையான சிவப்பு நிறமாகும். முதிர்ச்சியடைவதற்கு 90-100 நாட்கள் தேவைப்படும். அதிக காரத்தன்மை உடையது.

 

 

நாசிக் சிவப்பு ( Nasic red) poor

இது பிரதானமாக மரக்கறிப்பயிராக செய்கை பண்ணப்படுகின்றது. கடுமையான சிவப்பு நிறத்தை கொண்டது. களஞ்சியப்படுத்துவதற்கு உகந்ததள்ள. இதை உற்பத்தி செய்வதற்கு ஒரு ஹெக்டயர் நிலப்பரப்பிற்கு 7.5-8.5 கி.கி தூய்மையான(சிறந்த) விதைகள் தேவைப்படுகிறது. இருந்தும் சிறந்த நாற்றுமேடை நுட்பங்களையும் உயர்ந்த தரமான விதைகளையும் பயன்படுத்தினால் ஒரு ஹெக்டயருக்கான விதை அளவை 6-7 கி.கி ஆக குறைக்கலாம்.

நாற்று மேடை முகாமைத்துவம்

நாற்றுமேடை நிலங்களை தெரிவு செய்வதற்கான தேவைப்பாடுகள்

 • நேரடியாக சூரிய ஒளி கிடைக்கக்கூடியதாக இருத்தல்.
 • நன்றாக நீர் வழிந்தோடும் செம்மண் நிலமாக இருத்தல்.
 • சில காலங்கள் தரிசு நிலமாக வேறு பயிர்ச்செயய்கை மேற்கொள்ளாத
       இடமாக இருத்தல்.
 • அநேக பருவங்களில் தொடர்ந்து வெங்காயப் பயிர்ச் செய்கை செய்த நிலமாக இருத்தல் ஏனெனில் மண்ணில் நோயாக்கிகள் அதிகரிக்க நேரிடும்.

நிலத்தை தயார்படுத்தல்

 • பயிரை நடுவதற்கு 3-4 வாரங்களிற்கு முன்னதாக, 20 தொடக்கம் 25 செ.மீ ஆழத்திற்கு மண்ணை உழுதல் அல்லது பிரட்டுதல் வேண்டும்.
 • மண்ணை அநேக முறைகள் நன்றாக பிரட்டி பயிர்ச் செய்கைக்கு ஏற்றதாக பண்படுத்த வேண்டும்.
 • நிலத்தை ஆயத்தம் செய்யும் போது நேரடியாக சூரிய ஒளி மண்ணில் பட்டு ஊடுருவச் செய்தல் வேண்டும்.

விதை நடுகை பாத்தியை (மேடையை ) தயார்படுத்தல்

 • நியம அளவிடையில் பாத்திகள் (3 மீ x 1 மீ x 15 செமீ) அமைத்தல்.
 • பாத்தியொன்றின் மேற்பரப்பு மண் நன்றாக பண்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
 • மேடையில் நோய்க் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்துவதற்கு முன்னர் உக்கிய சேதன பசளையை மண்ணில் 10 செமீ ஆழத்திற்கு ( 10-15 கிகி/தரமான பாத்திக்கு)நன்றாக ஒன்று சேர்த்தல் வேண்டும்.

நோய்க்கிருமிகளை தொற்றுநீக்கம் செய்தல்

நாற்றழுகல் நோயிற்கான நோய்க் காரணிகளை ( Pythium, Phytophora, Rhixoctonia, Sclerotium, Fusarium spp ) இல்லாதொழிப்பதற்கு கீழே பரிந்துரைக்கப்பட்ட யாதேனும் ஒரு முறையை பாவித்தல் அவசியமாகும்.

(i)            வாரத்திற்கு ஒரு முறை 3 நேரம் நேரடியாக சூரிய ஒளி படுமாறு மண்ணை பிரட்டுதல் வேண்டும்.

(ii)           வைக்கோல் மற்றும் நெல் உமிகளை பாவித்து மண்ணை எரித்தல் வேண்டும்.

 

(iii)          பங்கசு நாசினிகளை பிரயோகித்து நன்றாக தொற்றுநீக்கப்பட்ட நாற்று மேடை பாத்திகளை உருவாக்குதல்.


 

பங்கசு நாசினிகளை கீழே காட்டியவாறு பிரயோகிக்கவும்.

பங்கசு நாசினி                                                                  அளவு/தரமான பாத்தி

Captan 50% or 80 % Wp                                                         20கி/16 லீட்டர் நீரில்

Thiram 80% Wp                                                                            25கி/16 லீட்டர் நீரில்

Thiophanate methyl 70% Wp                                                  10கி/16 லீட்டர் நீரில்

Thiophanate methyl 50% Thiram 30%                                    18கி/16 லீட்டர் நீரில்

 

 

பசளை பிரயோகம்

கீழே காட்டப்பட்ட உரக் கலவையை பாத்தியின் மேற்பரப்பிற்கு இடவும்

யூறியா 15 கிராம்

முச்சுப்பர் பொஸ்பேட் 30 கிராம்

மியூறியேற்றுப் பொட்டாசு 15 கிராம்

விதை பரிகரிப்பு

விதைகளினூடாக நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு 4-6 கிராம் நிறையை கொண்ட மேலே காட்டப்பட்டுள்ள பங்கசு நாசினிகளில் ஒன்றை 1 கி.கி விதையுடன் நன்றாக கலக்கவும்.

விதைகளை நடுகை செய்தல் (Sowing)

a)    விதைகளை வரிசையாக ஒரு பாத்திக்கு 40-50 கிராம்/ நாற்றுமேடை வீதம் 1 செமீ ஆழத்தில் 10-15 செமீ இடைவெளி விட்டு நடுகை செய்யவும். அதன் பின்னர் வைக்கோலை கொண்ட மூடு படையினால் மூடவும்.

b)    மூடிய பின்னர் விதைகள் முளைக்கும் வரையில் ஒவ்வொரு நாளும் தண்ணீர் விசிறவும்.

 

முளைத்தல்

 

a)    வழக்கமாக 8-10 நாட்களில் முளைத்தல் நிறைவடையும்

b)    முளைத்ததன் பின்னர் மூடுபடைகளை அகற்றவும்

c)    பாத்திகளை மழைகளில் இருந்தும் சூரிய வெளிச்சத்திலிருந்தும் பாதுகாப்பதற்காக வெள்ளை பொலித்தீலின் கொண்டு மூடிவிடவும்.

 

நாற்றுக்களை கடினமாக்குதல் (வன்மையாக்கல்)

 

நீர் பாயச்சும் நேர இடை வெளியையும்,சூரிய ஒளி படும் நேரத்தையும் அதிகரித்தல் வேண்டும்.

 

3-4 இலைகளை தளிர் கொண்டதும், 15-18 செ.மீ உயரமும், சற்று குமிழ்கள் காணக்கூடியதும் அத்தோடு 30-40 நாட்கள் வயதை எய்திய முளை நாற்றுக்கள் பிடுங்கி நடுவதற்கு மிகவும் உகந்ததாகும். நன்றாக குமிழ்கள் விருத்தியடைந்த வெங்காயத்தை பெற்றுக்கொள்ள, நடுவதற்கு முன்னர் முளை நாற்றுக்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும்.

 

 

பயிரை நிலத்தில் ஸ்தாபித்தல்

மண்ணின் தன்மை

மிகவும் சிறந்த வளமான மண்ணில் வெங்காய பயிர்ச் செய்கையை வெற்றிகரமாக உற்பத்தி செய்யலாம். pH 6-7 வீச்சைக் கொண்ட மண் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சேதன மண்ணில் அதைவிட குறைந்த pH வீச்சு திருப்பதிகரமானதாகும். இலங்கையில், இதற்கு பொருத்தமான மண் வகைகளான “ Reddish Brown Earth and Regosols ” என்பன உலர் வலயத்தில் காணலாம் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

காலநிலை

நீடித்த அளவு பகற்காலம் தேவைப்படும் பயிராதலால் (12 மணித்தியாளத்திற்கும் அதிகமாக ) இது பகற் காலம் நீடித்த தாவரமாகும். எனினும் அயன மண்டலங்களில் பயிரிடக்கூடிய சில இதன் வர்க்கங்களுக்கு 11-12 நீண்ட பகல் காலங்கள் தேவைப்படும். இலங்கையின் கால நிலைக்கேற்ப சிறு போகத்தில் இப்படிப்பட்ட வர்க்கங்களே சிறந்த வெங்காயக் குமிழ்களை உற்பத்தி செய்யக்கூடியவை. பயிர்ச் செய்கை காலம் முழுவதும் குறைந்த அளவான மழை வீழ்ச்சி ( 750 மி.மி க்கும் குறைவான) இருத்தல் வேண்டும். அறுவடை செய்யும் காலத்தில் ( இறுதி 1 மாதத்தில்) வரண்டு வெப்பமாயுமிருந்தால் சிறந்த போகத்தை பெறலாம். அதாவது இதற்கு சார்பான 70% ற்கும் குறைந்த ஈரப்பதன் (RH) அனுகூலமானதாகும். நடுகை செய்வதற்கு ஏற்ற காலம்

நாற்று மேடை பிரயோகத்திற்கான சரியான காலத்தை முடிவெடுப்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் நாற்று நடுகையை தீர்மாணிப்பதும் இதனிலேயே தங்கியுள்ளது. இலங்கையில் நாற்று மேடை தயார் செய்வதற்கான காலம் ஏப்ரல் முற்பகுதி தொடக்கம் மே மாதம் முற்பகுதி வரைக்கும் சிபாரிசு செய்யப்படுகிறது. இந்த பயிருக்கு தேவைப்படும் காலநிலைமை ( மே – செப்தெம்பர்) நாட்டில் சிறுபோகத்தின் போதே வியாபித்திருக்கும். ஆகவே சிறந்த விளைச்சலை பெறுவதற்கு மே மாதம் நடுப்பகுதி தொடக்கம் ஜீன் மாத நடுப்பகுதி வரை நாற்று நடுகை செய்வது சிறந்ததாகும்.

பெரும் போகத்தின் கடைசி காலப் பகுதியில் ஈரமான நாற்றுத் தொகுதிகளை பாவித்து நடுதல் நடைமுறையில் உள்ளது ( டிசம்பர் - பெப்ரவரி ) எனினும் இக்காலகட்டத்தில் கால நிலைமைகள் பயிருக்கு அநுகூலமானதல்ல, எனவே நடுகை செய்தலும் பெரிதாக பிரபல்யமயடைவதில்லை.

நிலத்தை தயார்படுத்துதல்

பயிர்ச் செய்கைக்கான நிலத்துண்டு விளைச்சலுக்கு முக்கிய காரணியாக அமைவதால் நன்றாக நீர் வழிந்தோடும் நிலத்தை தெரிவு செய்தல் வேண்டும். நிலத்தை ஆயத்தம் செய்வதற்கு முன்னதாக முதலில் களைகளை அழித்தல் அவசியமாகும். நிலத்தை தயார்படுத்துவதற்கு 10-14 நாட்களுக்கு முன்னர் களைகள் நன்றாக செழிப்புற்றிருக்கும் போது கைகளால் பிடிங்கியோ அல்லது பொதுவான களை நாசினிக் பாவித்தேனும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். நிலத்தை 8“ ஆழத்திற்கு உழுது மண்ணை நன்றாக மிருதுவாக்கல் வேண்டும். பொதுவாக ( 1 மீ x 3 மீ x 15 செமீ ) பாத்திகள் சிபாரிசு செய்யப்படுகிறது. நடுகை செய்வதற்கு முன்னதாக ஏதாவது நன்றாக உக்கிய ஒரு வகை சேதன பசளையை ஆகக் குறைந்தது ஒரு ஹெக்டயருக்கு 10 மெ.தொன் வீதம் இடுதல் அவசியமாகும்.

நாற்றுக்களை நடுதல்

நாற்றுக்களை நடுவதற்கு 2- 3 நாட்களுக்கு முன்னதாக மண்ணில் நன்றாக நைதரசன், பொசபரசு, பொட்டாசிய பசளைகள் ஒன்றாகக் கலந்திருத்தல் வேண்டும். சிறந்த விளைச்சலுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 100-156 தாவரங்கள் போதுமானதாகும். சிறந்த வெங்காயக் குமிழ்களுக்கு 1 செமீ நடுகை ஆழத்திற்கு நடுகை செய்தல் சிறந்ததாகும். நல்ல விருத்தியடைந்த குமிழ்களை பெறுவதற்கு ஆழமாக நடுகை செய்தல் பொருத்தமற்றது. நடுவதற்கு தேர்வு செய்து முன்கூட்டியே பராமரிக்கப்பட்ட முளை நாற்றுக்களை பயன்படுத்துதல் வேண்டும்.  

முளை நாற்றுக்களை பராமரித்தல்

Thiophanate methyl 70% 20g/10 lit of water

Thiophanate methyl 50% + Thiram WP 18g/10 lit WP 20g/10 lit of water

Thiram 80% WP 150g/10 lit of water

முளைநாற்றுக்களை 20-30 நிமிடம் வரை நனைத்த பின்னர் நடுதல் வேண்டும்.

பயிர் முகாமைத்துவம்

களைக் கட்டுப்பாடு

நட்ட பின்னர் உடனடியாக பலன் தரும் களைநாசினிகளை பிரயோகித்து அதன் பின்னர் கைகளில் களைகளை ஒரு தரம் அல்லது இரண்டு தரம் பிடுங்கி எறிதல் பயிரை சுற்றியுள்ள களைகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமானது.

அலகோல் - 480கி/1 EC -3-5 லீ/ஹெக்

ஒகஸ்பிலுயூஒரபன் (Oxyfluorfen)- 240கி/EC-0.5 லீ/ஹெ

 

பசளைகளை ஒன்றக் கலத்தல்

பொசுபரசு, பொட்டாசியம் என்பன எளிதாக மண்ணில் நடுகை செய்வதற்கு முன்பே கலக்கின்றன. அநேகமான சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையான நைதரசன் இவ்வாறு மண்ணுடன் ஒன்று சேர்ந்தாலும் மேலதிக நைதரசன் பயிர் வளரும் போதும் இடப்படுகிறது.

பசளை சிபாரிசு

காலம்                                     கிகி/ஹெ

                                                                                       நைதரசன்(N)    யூரியா (Urea)     P2O5   TSP   K2O MOP

அடிகட்டுப் பசளை
( நடுவதற்கு 2 நாட்களிற்கு முன்னர்     30           65           45           100         30           50

1து மேற்கட்டுப் பசளை

( நடுகை செய்து 3 கிழமையின் பின்னர் ) 30           65           -              -              -              -

2வது மேற்கட்டுப் பசளை

( நடுகை செய்து 6 கிழமைகளின் பின்னர் ) 30     65           -              -              15           25

 

TSP- முச்சுப்பர் பொஸ்பேற்று   MOP– மியூரேற்றுப் பொட்டாசு

நீர் முகாமைத்துவம்

ஆரம்ப கட்டங்களில் பயிருக்கு நீர் அதிகம் தேவைப்படும். ஆகவே அநேகமாக 3 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சி பின்னர் இதை அதிகரிக்கலாம். இந் நீர் பாய்ச்சல் இடைவெளி மண்ணின் தன்மையை பொருத்தே தங்கியுள்ளது. எனினும் நீர் பாச்சிய பின்னர் நீர் வழிந்தோடுதல் மிக முக்கியமாகும் இல்லையேல் சீரற்ற வடிகாலமைப்பின்மையால் விளைச்சல் குறையும். அறுவடையின் தரத்தை அதிகரிப்பதற்கு அறுவடைக்கு 2 வாரங்களுக்கு முன்பே நீர் விநியோகத்தை நிறுத்துதல் வேண்டும்.

நோய் பீடைகளுக்கான தொழில்நுட்பம்

பனிப்பூச்சிகள் (Thrips tabaci)

இலங்கையில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பீடையாகும்.

ஜீலை, ஆகஸ்ட்டு மாதங்களில் வெப்பமண்டல மற்றும் காற்றொட்டமான காலநிலை என்பதால் பீடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். பூச்சிகள் சத்தமிட்டு இலைகளை அழுத்திப்பிடித்து இலைக் கலங்களை துளையிட்டு சாற்றை வெளியேற்றும். பூச்சிகள் சூரிய வெளிச்சம் குறைவான காலையிலும் மாலையிலும் சுறுசுறுப்பாக இயங்கும்.

 

 

பௌதீக கட்டுப்பாடு   பயிரை சரியான காலத்தில் ஸ்தாபித்தல்

                                                               நிலத்தை முறையாக தயார் செய்தல்

                                                                களைகளை கட்டுப்படுத்தல்

இரசாயனக் கட்டுப்பாடு      Thiochlorid 400 ml/ha

                                                                                Diasinon 50% EC 1400 – 2100 ml/ha

                                                                                Imidochlorprid 500 ml/ha

                                                                                Fipronil 500ml/ha

 

 

 

இலை உண்ணும் கம்பளிப்பூச்சி (Spodoptera exigua)

பௌதீக கட்டுப்பாடு   பயிர் மீதிகளை அழித்தல்

                                                                நிலத்தை முறையாக தயார் செய்தல்

கைகளால் முட்டைகளையும் கூட்டுப்புழுக்களையும்     அழித்தல்

இரசாயனக் கட்டுப்பாடு                      Diasinon 50% EC 1400 – 2100 ml/ha
                                                                                                Imidochlorprid 500 ml/ha
                                                                                                Deltamethrin 25% EC 270ml/ha

 

வேர்களை உண்ணும் எறும்புகள் (Dorylus spp)

Diazinon 500g/1 EC 115ml/100m2

 

 

நோய்

ஊதாப்புள்ளி நோய் (Alternaria porri)

ஒழுங்கற்ற வெள்ளை புள்ளிகளை இலைகளின் மேல் காணலாம். பின்னர் அவை நீள்வட்ட (முட்டை) வடிவான இளம் சிவப்பு விளிம்புகளுடன் பழுப்புநிற புள்ளிகளாக விரிவடையும். இறுதியில் கருப்பு நிற திட்டுகளாக மாற்றமடையும்.

பௌதீக கட்டுப்பாடு   பயிர் மீதிகளை அகற்றி அழித்தல்

                                                                நிலத்தை நன்றாக பண்படுத்தி தயார் செய்தல்

 

இரசாயனக் கட்டுப்பாடு      Mancozeb 80% WP 0.9 – 1.3 kg/ha

                                                                                Chlorothalonil 500g/1 SC 1.4-2 1/ha

                                                                                Manaeb 880% WP 0.9-1.3kg/ha

 

அந்திரக்நோஸ் (Colletotrichum gleospordes)

ஆரம்பத்தில் நீள்வட்ட வடிவில் வெண்மையான ஆழமான திட்டுக்களை காணலாம். பின்னர் வித்திகளை இத் திட்டுக்களில் காணலாம். முறுக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறும். இறுதியில் குமிழ் அழுகல் ஏற்படும்.

பௌதீக கட்டுப்பாடு நோய் தொற்றிய நிலங்கள் பயிர் செய்கைக்கு பொறுத்தமற்றதாகும். தோற்றிய பகுதிகளை நிலத்தில் இருந்து அகற்றவும். வடிகால் கான்களை மேம்படுத்தவும்

சுழற்சி பயிரச் செய்கை முறை (3-4 பருவங்களுக்கு- அவரையின பயிர் செய்கை ) நாற்றுப் பராமரிப்பு.

                Mancozeb 80% WP 0.9 – 1.3 kg/ha

                Thiophanate methyl 70% WP 0.3 – 0.5 kg/ha

                Thiabendazole 45% DF 0.9 – 1.3 kg/ha

 

குமிழ் அழுகல்

பங்கசு ( Fusarium spp, Phythium spp, Sclerotium spp, Rhizoctonia spp ) இலை மஞ்சலாதல், நுணி காய்தல், வேர் அழுகி மாற்று வேர்கள் தோன்றுதல், மென்மையான அழுகிய குமிழ்களையும் கழுத்தழுகலையும் காணலாம்.

பௌதீக கட்டுப்பாடு   பயிர் மீதிகளை அகற்றி அழித்தல்.தொற்றிய தாவரங்களை நிலத்தில் இருந்து அகற்றவும். முறையான நீர் முகாமைத்துவம். (நீர் பாச்சல் மற்றும் நீர் வடிப்பு)

பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தல்

வடிகாலமைப்பு புணரமைக்கவும்

நீரை நோய் தொற்றிய பிரதேசங்கள் - பகுதிகள் வழியாக பாய்ச்சுதல் கூடாது.

 

விதை பராமரிப்பு செய்தல்

( Captan 6g/1kg of seeds, Thiram 4-5g/kg seeds, Homai 4g/ kg seeds)

மண் பரிகரிப்பு   Thiabendazole – 5g/10m2
                                               Thiram 70g/m2

                                                Bacteria : Pseudomonas spp

 

உண்மை விதைகளை உற்பத்தி செய்தல்

உண்மை விதைளை பெரும் போகத்தில் உற்பத்தி செய்தல்

 • மாறுதலில்லாத (60-70 கி/குமிழ்கள்) நடுத்தர அளவான ஒத்த வளர்ச்சி இயல்புகளைக் கொண்ட தாய் குமிழ்களை (Mother bulbs) சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களில் இருந்து தேர்ந்தெடுத்து டிசம்பர் மாதம் வரை களஞ்சியப்படுத்தி வைக்கவும். வசந்த கால நிலைப்படுத்தலில் தாழ்ந்த வெப்பநிலையில், களஞ்சியப்படுத்தி வைத்த (8-15ocயில் நடுவதற்கு முதல் இரண்டு வாரங்கள் வரை)குழிழ்களை சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினி கொண்டு தொற்று நீக்கவும். அடிகட்டுப் பசளையாக (TSP-100 கிகி.ஹெ, MOP -50 கி.கி/ஹெ) நடுகைக்கு 2 நாட்களுக்கு முன் இடவும். நடுகை செய்து ஒரு வாரத்தின் பின்னர் யூரியா 65கி.கி/ஹெக்டயருக்கு, 1வது மேற்கட்டு பசளையாகவும், பூ மொட்டுக்கள் வெளிவர ஆரம்பிக்கும்போது ஒரு ஹெக்கடயருக்கு முறையே யூரியா 65கிகி, MOP-25கிகி, 2வது மேற்கட்டுப் பசளையாகவும் இடவும். தாய் குமிழ்களை உயர்ந்த மேடைகளில் 22.5 x 22.5 செ.மீ இடைவெளியில் நட்டு பயிரை வெள்ளை பொலித்தீனால் 3 அடி உயரத்திற்கு இரவிலும் மழை நேரங்களிலும் மூடி வைத்தல் வேண்டும். நடுகை செய்வதற்கு ஏற்ற காலம் ஜனவரி மாதமாகும். அத்தோடு சூரியகாந்தி போன்ற தாவரங்களை குமிழ் பயிர்களை சுற்றி நடுதல் வேண்டும். இது பூச்சிகளை கவர்ந்திழுத்து மகரந்த சேர்க்கையை அதிகரிக்க உதவும். முற்றிய விதைகளை நடுகை செய்து மூன்று மாதத்தில் அறுவடை செய்யலாம். விதைகளை நன்றாக உலரவிடுதல் வேண்டும், இல்லையேல் முளைதிறன் விரைவாக அழிவுரும்.

 

 • நோய் பீடைக் கட்டுப்பாடு

 

பெரும் போக பயிர்ச் செய்கை நடைபெரும் காலங்களில் போகத்திற்கு ஒவ்வாத கால நிலைமை ஏற்படும் போது குமிழ் அழுகல், ஊதாப் புள்ளி நோய், மற்றும் அந்திரக்நோஸ் ஆகியன பயிரைத் தாக்கும் பிரதான நோய்க்காரணிகளாகின்றன. ஆதலால் இரசாயனங்களை பூக்கள் மலரும் சந்தர்ப்பங்களில் கவனமாக தெளித்தல் வேண்டும், ஏனெனில் பூச்சிக்களை கவர்ந்திழுத்தல் குறையலாம். இதற்கான கட்டுப்பாட்டு முறையில் மாற்றம் ஏதும் இல்லை. பயிருக்கான கட்டுப்பாட்டு முறையையே இதற்கும் பின்பற்றலாம்.

 

 • உண்மை விதைகளை பெரும் போகத்தில் உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான பிரதேசங்களை தெரிவு செய்தல் வேண்டும்.

 

 

அதிக நோய் தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் உண்மை விதைகளை உற்பத்தி செய்ய சாதகமான பிரதேசங்களை கண்டறிதல் அவசியமானதாகும். இதற்கென பண்டாரவளையின் (IM3) பகுதி DL1 வலய பிரதேசத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது நோய் ஏற்படும் குறைந்த சந்தர்ப்பங்களையும் அதிக விளைச்சலையும் தந்தது. பயிர்ச் செய்கை முறையும் நடுகை செய்யும் காலங்களும் DL1 வலயத்தை போன்றதாயினும் முதிர்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. ( DL1 உடன் ஒப்பட்டளவில் 30 நாட்களுக்கும் அதிகமாகிறது)

 

 • “பொலி டனல்” (Poly tunnel) முறையை பாவித்து பெரும்போகத்தின் போது உண்மை விதைகளை உற்பத்தி செய்தல்.

 

டிசம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை ஏற்படும் மழை அதிக நோய்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குகிறது இதனால் விதைக்கான போகம் சாத்தியமற்றதாகிறது. எனவே காற்றோட்டம் நிகழும் திறந்த பக்கங்களைக் கொண்ட பொலிடனல் முறைகளில் உண்மை விதைகளை உற்பத்தி செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு பின்பற்றப்படும் அனைத்து பயிர்ச் செய்கை முறைகளும் பெரும் போகத்தில் உண்மை விதைகளை உற்பத்தி செய்வதற்கு கையாளும் முறைகளை ஒத்தவையாகவே இருக்கும். சாதாரண பயிர் போகத்துடன் ஒப்பிடும்போது பொலிடனல் முறையில் குறைந்த நோய் சந்தர்ப்பங்களுடன் கூடிய தரம் கொண்ட சுத்தமான விதை விளைச்சலைப் பெறலாம்.

 

சிறு போகத்தில் உண்மை விதை உற்பத்தி.

முன்னய சிறு போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நடுத்தர அளவான (60-70 கி/குமிழ்)தாய்க் குமிழ்கள் மே மாதம் வரை களஞ்சியப்படுத்தி வைக்கப்படல் வேண்டும். உயர்த்தப்பட்ட பாத்தி மேடைகளில் 15 x 15 செமீ இடைவெளிகளில் இந்த தாய்க் குமிழ்களை மே மாத ஆரம்பத்தில் இருந்து அதே மாதத்தின் நடுப்பகுதி வரை நடுகை பண்ணலாம். குமிழ்களை பயிர்ச் செய்தல், பராமரித்தல், பசளையிடல் யாவும் பெரும் போகத்தை போன்றதே. ஆனால் பயிர்களை மூடுதல் தேவையற்றது. பெரும்போகத்துடன் ஒப்பிடும் போது நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவது மட்டுமன்றி ஒப்பிட்டளவில் விளைச்சலும் அதிகமாகும்.

 

அறுவடையும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பமும்

 

நிலத்தை கண்கானித்தலும் அறுவடையும்

 

பயிர் நாட்டப்பட்டு 100 நாட்களின் பின்னர் முதிர்ச்சியடையும். இது அப்பிரதேசத்திற்கு பொருத்தமான விதை வர்க்கத்திலும் கால நிலையிலும் தங்கியுள்ளது. பயிர் 50% கழுத்தளவிற்கு வளைந்து சாயும் நேரத்தில் பயிர்கள் வளைக்கப்படவோ பலகை பாவித்து மிதித்து அழுத்தப்படவோ வேண்டும். அதன் பின்னர் நீர் விநியோகம் நிறுத்தப்படல் வேண்டும். இவ்வாறு செய்து 14 நாட்களுக்கு பின்னர் பயிர் பிடுங்கப்பட்டு, தரத்தை உயர்த்துவதற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் ஏதுவாக நிழலில் உலர்த்ப்படல் வேண்டும். இதன் பின்னர் குமிழ்கள் அதன் காய்ந்த செதில்களுடன் மூடப்பட்டிருப்பதை காணலாம், இவ் அறுவடை பின்வரும் காலங்களில் சேமித்து வைப்பதற்கு உகந்ததாக அமையும்.

 

வெங்காயத்தை சேமித்து வைத்தல்

 

 • “ஏகிரி பவூன் லைட் ரெட்” (Agri found light red ), பூசா சிவப்பு ( pusa red ), ராம்பூர் (Rampure), கல்பிட்டி தேர்வு (Kalpitiya selection) ” Light red” ஆகிய வர்க்கங்கள் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு தகுதியானவையாகும்.

 

 • 75-150 கி.கி N/ha க்கு பிரயோகிப்பது களஞ்சியப்படுத்துவதற்கான சிறந்த தர குமிழ்களை பெருவதற்கு போதுமானது.
 • அளவுக்கதிகமான மருந்தை பிரயோகித்தல் களஞ்சியப்படுத்தும் வாய்ப்பை வெகுவாக குறைத்துவிடும்.
 • 50% இலைகள் விழும் தருனத்தில் “ Malic hydracide ” ஐ தெளிப்பதால் பூ அரும்பு உருவாதல் மூலமான இழப்பைக் குறைக்கலாம். (விசேடமாக தாழ்ந்த வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தியிருக்கும் போதும் மற்றும் “Carbendazim” (8 கி/10l ) ஐ அறுவடைக்கு இரண்டு வாரங்களுக்கு முன் தெளிப்பதால் களஞ்சியப்படுத்தியிருக்கும் போது அழுகுவதால் ஏற்படும் இழப்பைக் குறைக்கலாம்
 • குமிழ்களின் சேமிப்புத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க 10 செ.மீ தடிப்பிற்கு களஞ்சியப்படுத்தலாம். பெரும்போகத்தின் பின்னர் களஞ்சியப்படுத்தல் காலங்களில் அதிக உயர்ந்த ஈரப்பதன் சம்பந்தப்படுவதால் அடுக்குகளின் கனஅளவு மேலும் உயர்த்தப்படுவது இவ்வாறு குறைக்கப்படுகிறது.
 • நடுத்தரமான (50-60 கி) குமிழ்களே களஞ்சியப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான குமிழ்களாகும். நியாயமான (20-30oc) வெப்பநிலையும் சாதகமான தாழ்ந்த ஈரப்பதனும் கொண்ட சுற்றாடல் பெரிய வெங்காயத்தை சேமித்து வைப்பதற்கு பொருத்தமானதாகும்.