சிறு தானியங்கள்  

அறிமுகம்

மெனாரி என்று அழைக்கப்படும் பொதுவான திணைகள் இரண்டு தானிய அளவுகளில் உள்ளன. சிறிய வகை, இதன் தானியங்கள் பொதுவாக முதிர்ச்சியில் சீரான தன்மை இல்லாததால் அதிக இழப்பு ஏற்படுகின்றன. பெரிய வகையானது சீரான தன்மை கொண்டதும் சீராக முதிர்ச்சியடைவதும் 60 நாட்களில் 4 மெ.தொன் விளைச்சலை தரக்கூடியது. இவை சிறு போகத்தின் ஆரம்ப மழையுடன் பயிர்ச் செய்கைக்கு மேற்கொள்வதற்கு சிறந்தது. நரிவால் திணை மற்றும் கொடோ திணை 3 மாதங்களில் முதிர்ச்சியடைந்து 3 மெ.தொன்/ஹெக் விளைச்சளைத் தரக்கூடியது. இது ஏழைகளின் பயிர் என்று அழைக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியாக குறைவான விளைச்சளைத் தருவதாலும் வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படாத காரணத்தினாலும் மக்கள் மத்தியில் பிரபல்யம்

காணப்படும் போஷாக்கு அளவுகளின் நூற்று வீதம்


 

பொதுவான திணை      

நரிவால் திணை

கொடோ திணை

காபோஹைதரேட்டு

59.75

60.81

68.60

புரதம்

11.43

11.41

7.54

கொழுப்பு

3.08

4.83

3.37

தாதுப்பொருட்கள்

4.98

3.46

2.89

ஈரப்பதன் 

11.81

11.09

12.29

நார்பொருட்கள்  

8.95

8.50

5.31

கலோரி அளவு/100கி

312.4

332.0

335.0


மருத்துவக் குணங்கள்

பொதுவான திணைகளும் நரிவால் திணையும் நாட்டு வைத்திய மருந்துகள் தாயரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விசேடமாக நரிவால் திணை பாம்புக் கடியினால் உடலில் ஏற்றப்படும் நஞ்சை அகற்றப் பாவிக்கப்படுகிறது. புதிதாக விருத்தி செய்யப்பட்டுள்ள வர்க்கங்கள் உணவிற்கும் மிருக உணவுகள் தயாரிப்பு நோக்கங்களுக்கும் மிகவும் உகந்தது. .

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

பொதுவான திணையின் வர்க்கங்கள்

MS 1491, AC 254, V62 என்பன இதன் நம்பிக்கை வாய்ந்த வர்க்கங்களாகும்

நரிவால் திணை

IS 480

கொடோ திணை

பயிர் ஸ்தாபித்தல்

தனியான பயிருக்கு பொருத்தமான இடைவெளியில் விதையிடுவதற்கு சாதாரணமாக பரிந்துரைக்கப்படுகிறது.

காலநிலையும் தேவையான மண் வளங்களும்

ஆழமான களி மண்ணும் மணலும் கலந்த செழிப்பான சேதனப் பொருட்கள் செறிந்த மண் திருப்திகரமான வளர்ச்சிக்கு உகந்ததாகும். நன்றாக நீர் வடிந்து செல்லக்கூடிய போதுமான அளவு ஈரப்பதனை பெற்றுக்கொள்ளக்கூடிய மண், தடங்களற்ற தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. மழைக்காலம் தொடங்கிய உடனேயே பயிர்களை ஸ்தாபித்தல், மண்ணின் ஈரபற்று குறைவதற்கு முன்பே அறுவடை செய்வதற்கு வசதியாக இருக்கும். ஏனைய பிரதான பயிர்களுக்கு தொடர்ச்சியான மழையும் முதிர்ச்சியடைவதற்கு 3-4 மாதங்கள் தேவைப்படும்.

நடுவதற்கான பயிர் இடைவெளிகள்

திணையை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து இரண்டு வாரங்களின் பின் 7.5-10 செ.மீ இடைவெளியில் இரு வரிசைகளில் இருக்கத்தக்கவாரு ஐதாக்கம் செய்தல்.

விதை நடுகைப் பொருட்கள்

ஒரு ஹெக்டயருக்கு 5-6 கி.கி விதைகள் நடுகை செய்வதற்காக தேவைப்படுகிறது.

 

நடுவதற்கு உகந்த காலம்

மழை அற்ற வறட்சி காலங்களில் போதுமான நீர்பாசனம் செய்தும் பெரும் போகத்தில் மானவாரி பயிர்களாகவும் பயிரிட்டு பயன் பெறலாம். பெரும் போக பயிர் வெற்றிகரமாக வளர்ச்சி பெறுவதற்கு பெரும்போக மழை ஆரம்பிக்கும் செப்தெம்பர் பிற்பகுதியிலோ அல்லது ஒக்டோபர் மாத முதல் வாரத்திலோ நடுகை செய்யலாம் அப்படியே சிறுபோக பயிராக சிறு போக மழைகாலம் ஆரம்பிக்கும் ஏப்ரல் மாத பிற்பகுதியில் நடுகை செய்தல் வேண்டும். இவ்வாறு சரியான நேரத்தில் பயிர்களை பயிரிடுவதனால் பீடைகளினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைத்துக்கொள்ளலாம்.

 

பயிர் முகாமைத்துவம்

களைக் கட்டுப்பாடு

கைகளால் பிடுங்கி களைகளை அகற்றியும் அல்லது முளைத்தழுக்கு முந்திய அல்லது முளைத்தழுக்கு பிந்திய களை நாசினிகளை பாவித்தும் களைகளை கட்டுப்படுத்தலாம். ஆகக் குறைந்தது பூக்கள் மலரும் காலம் வரையிலுமாவது பயிர்கள் களைகளின்றி பராமரித்தல் முக்கியமானதாகும்.

பசளை பிரயோகம் ( கி.கி/ஹெக்டெயார் )


பயிர்      யூரியா

செறிந்த 

சுப்பர் பொஸ்பேட்டு

முயூரேற்று பொட்டாஸ்

அனைத்து திணைப் பயிர்களுக்கும்

125

50

50


நீர்ப்பாசனம்

வறண்ட காலப் பகுதியில் வறட்சியின் தீவிரத்தன்மைக்கேற்பவும் மண்ணின் தன்மைக்கேற்பவும் 4-7 நாட்களுக்கு நீர் பாய்ச்சப்படுவது அவசியமாகும்.

 

 

பூச்சி பீடை மற்றும் நோய்க் கட்டுப்பாடு

சிறு திணைகள் நோய்களினால் தாக்கப்படுவது மிகவும் அறிதாகும்.

 

அறுவடையும் அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பமும்

பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு சூரிய வெப்பத்தினால் தானியங்களில் உள்ள ஈரலிப்பு ஒரு பாதுகாப்பான நிலைக்கு குறைவடையும் வரை காய வைக்கப்படுகிறது. தானியங்களில் ஈரப்பற்று குறைவாகவும் பௌதீக ரீதியாக முதிர்ச்சியடைந்ததும் தானிய விதைகளின் மேல் ஓடுகள் அகற்றப்பட்டு கைகளால் துப்பரவு செய்யப்படுகிறது.

உணவு தொழில்நுட்பமும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பமும்

விதைகளுக்கான விஷேட பராமரிப்பும் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகளையும் தவிர அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய வசதி வாய்ப்புக்களை இன்னும் விருத்தி செய்யவேண்டியிருப்பதாலும், வர்த்தகத்திற்கான தானியங்களுக்கு நோய்ப் பீடைகளினால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்ப்பதற்காகவும் கூடியளவு விரைவாக இவைகள் விற்கப்படுகின்றன. இதன் காரணமாக அதிகளவான உற்பத்திகளை சாதாரண விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருக்கிறது.

 

சந்தைப்படுத்தலும் பொருளாதாரமும்

பொதுவான சிறு திணை தானியங்கள் 1996-2001 இடைப்பட்ட காலப்பகுதியல் பயிரிடப்பட்ட நிலப் பரப்புகளும் (ஹெக்டயர்) உற்பத்தியும் ( மெ.தொன்) .

வருடம்    பொதுவான தினை தானியங்கள்   உற்பத்தி ( மெ.தொன்)


Year

Common Millets

 

விஸ்தீரணம் (ஹெக்டயர் )

உற்பத்தி (மெ.தொன்)

1996          

306

194

1997

194 

116

1998

213

132

1999

161

101

2000

181

121

2001

130

91