இறுங்கு( Sorghum bicolor L Moench)

அறிமுகம்

உலக சந்தையின் தானிய விலைகளின் கேள்வியில் தங்கியுள்ள இறுங்கு, மிருகங்களுக்கான தீவன உற்பத்தி துறையில் சோளத்திற்கு இணையான போட்டி உற்பத்திப் பொருளாக திகழ்கின்றது. இந்தியாவின், பகுதி வறட்சியைக் கொண்ட அயன மண்டல நாடுகளுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் ( Semi – Arid Tropics ) ( ICRISAT) உணவுக்கும் தீவனத்திற்கும் மிகவும் பொருத்தமான மூலக் கருவுலத்தை (மூலவுயிருரு) அபிவிருத்தி செய்துள்ளது. புதிதாக விருத்தி செய்யப்பட்ட இதன் வர்க்கங்கள் விளைச்சலிலும் தரத்திலும் சிறந்ததாயினும், மக்கள் மத்தியில் மற்றைய பிரதான தானிய வகைகளுக்குள்ள செல்வாக்கும் பறவைகளினால் இதற்கு ஏற்படும் அதித பாதிப்பும் இறுங்கிற்கான குறைந்த கேள்விக்கும் மதிப்பிற்கும் காரணியாக அமைந்துள்ளது.

 

போசணை அளவு %

காபோஹைதரேட்டு                   74.93

புரதம்                                                                 7.57

கொழுப்பு                                                  3.92

கனிப் பொருட்கள்                                     2.89

ஈரப்பதன்                                                  9.38

நார்பொருட்கள்                                   1.31

கலோரி அளவு/100ப                    365.3

 

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

வர்க்கம் IS 2941

வெளியிடப்பட்ட வருடம் 1971

 

 

பயிர் ஸ்தாபித்தல்

காலநிலையும் மண் தேவைப்பாடும்

ஆழமான களி மண்ணும் மணலும் கலந்த செழிப்பான சேதனப் பொருட்கள் செறிந்த மண் திருப்திகரமான வளர்ச்சிக்கு உகந்ததாகும். நன்றாக நீர் வடிந்து செல்லக்கூடிய போதுமான அளவு ஈரப்பதனை பெற்றுக்கொள்ளக்கூடிய மண், தடங்களற்ற தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. மழைக்காலம் தொடங்கிய உடனேயே பயிர்களை ஸ்தாபித்தல், மண்ணின் ஈரபற்று குறைவதற்கு முன்பே அறுவடை செய்வதற்கு வசதியாக இருக்கும். ஏனைய பிரதான பயிர்களுக்கு தொடர்ச்சியான மழையும் முதிர்ச்சியடைவதற்கு 3-4 மாதங்கள் தேவைப்படுவது போலவே இதற்கும் தேவைப்படுவதால் பெரும் போகத்தில் அப்பயிர்களுடன் இறுங்கையும் பயிரிடலாம்.

நிலத்தை தயார் செய்தல்

மண்ணில் ஆழத்திற்கு வளரக்கூடிய இறுங்கு தாவரத்திற்கு உகந்ததாக 45செ.மீ அழமாக மண்ணை உழுதல் அவசியமாகும். இறுங்கு நடுகை செய்வதற்காக 60 செமீ தூரத்திற்கு மண் முகடுகள் அமைக்கவும் முடியும். இவ்வாறு விதைகள் முகடுகளில் நடப்படுதல் அதிக மழை காலங்களில் நீர் மண்ணில் தேங்கி நிற்காமல் வழிந்தோடுவதற்கு வழி சமைக்கும். மழை காலங்களின்போது மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக போதுமான அளவு வடிகால் அமைப்புக்களை உருவாக்குதல் வேண்டும்.

பயிர் இடைவெளி

இறுங்கு விதைகள் 60 x 30 செமீ தூரத்தில் ஒரு நடுகைக்குழிக்கு 2 தாவரங்கள் வீதம் நடுவதற்கு ஏதுவாக தயார்ப்படுத்தல்.

நடுகைப் பொருட்கள்

ஒரு ஹெக்டயருக்கு 8-10 கி.கி விதைகள் நடுகை செய்வதற்காக தேவைப்படுகிறது.

பயிர் ஸ்தாபிப்பதற்கு ஏற்றகாலம்

மழை அற்ற வறட்சி காலங்களில் போதுமான நீர்பாசனம் செய்தும் பெரும் போகத்தில் மானவாரி பயிர்களாகவும் பயிரிட்டு பயன் பெறலாம். பெரும் போக பயிர் வெற்றிகரமாக வளர்ச்சிப் பெறுவதற்கு பெரும் போக மழை ஆரம்பிக்கும் செப்தெம்பர் பிற்பகுதியிலோ அல்லது ஒக்டோபர் மாத முதல் வாரத்திலோ நடுகை செய்யலாம் அப்படியே சிறுபோக பயிரை சிறு போக மழைகாலம் ஆரம்பிக்கும் ஏப்ரல் மாத பிற்பகுதியில் நடுகை செய்தல் வேண்டும். இவ்வாறு சரியான நேரத்தில் பயிர்களை பயிரிடுவதனால் பீடைகளினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மட்டுப்படுத்தலாம்.

 

 

 

பயிர் முகாமைத்துவம்

களைக் கட்டுப்பாடு

கைகளால் பிடுங்கி களைகளை அகற்றியும் அல்லது முளைத்தழுக்கு முந்திய அல்லது முளைத்தழுக்கு பிந்திய களை நாசினிகளை பாவித்தும் களைகளை கட்டுப்படுத்தலாம். ஆகக் குறைந்தது பூக்கள் மலரும் காலம் வரையிலுமாவது பயிர்கள் களைகளின்றி பராமரித்தல் முக்கியமானதாகும்.

 

பசளைப் பிரயோகம்( கி.கி/ஹெக்)

பயிர்               யூரியா  செறிந்த சுப்பர் பொஸ்பேட்டு மியூரேற்று பொட்டாஸ்

இறுங்கு   150         100         50

                                               

 

நீர்பாசனம்

வறண்ட காலப் பகுதியில் வறட்சியின் தீவிரத்தன்மைக்கேற்பவும் மண்ணின் வகையைக்கேற்பவும் 4-7 நாட்களுக்கு நீர் பாய்ச்சப்படுவது கட்டாயமாகும்.

நோய் பூச்சி பீடைக் கட்டுப்பாடு

வேர் தண்டு அழுகல், இலை கருகல், கதிர் உறை கருகல் போன்ற இலை வழி நோய்கள் ஈரமான நாட்களில் பொதுவானவையாகும் அத்தோடு இறுங்கும் அழுகல் நோய்களுக்கு எளிதாக உட்படக்கூடியதாகும்

அறுவடையும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பமும்

அறுவடை

பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு சூரிய வெப்பத்தினால் தானியங்களில் உள்ள ஈரலிப்பு ஒரு பாதுகாப்பான நிலைக்கு குறைவடையும் வரை காய வைக்கப்படுகிறது. தானியங்களில் ஈரப்பற்று குறைவாகவும் பௌதீக ரீதியாக முதிர்ச்சியடைந்ததும் தானிய விதைகளின் மேல் ஓடுகள் அகற்றப்பட்டு கைகாளால் துப்பரவு செய்யப்படுகிறது.

உணவு தொழில்நுட்பமும் அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பமும்;

விதைகளுக்கான விஷேட பராமரிப்பும் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகளையும் தவிர அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய வசதி வாய்ப்புக்களை இன்றும் விருத்தி செய்யவேண்டியிருப்பதாலும், வர்த்தகத்திற்கான தானியங்களுக்கு நோய்ப் பீடைகளினால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்ப்பதற்காகவும் கூடியளவு விரைவாக இவைகள் விற்கப்படுகின்றன. இதன் காரணமாக அதிகளவான உற்பத்திகளை சாதாரண விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாக இருந்தது. மிருக உணவு (தீவனம்) உற்பத்திக்காக உற்பத்தியின் 75 வீதமான சோள, இறுங்கு பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.